பேருந்திற்கு முன்னால் படுத்து மக்கள் ஆர்ப்பாட்டம்: வவுனியாவில் பதற்றம்
வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் இன்று காலை மக்கள் பேருந்தினை மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா - ஆசிகுளம் வழியில் குறித்த பேருந்து போக்குவரத்தானது தமது கிராமத்தினூடாக சரியான நேரத்தில் பயணிப்பது இல்லை.
இதன் காரணமாக அவ்வழியூடாக பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் காலையில் பணிகளுக்கு செல்பவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ஆச்சிபுரம் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் பாடசாலை நிறைவடைந்து மாணவர்கள் வீடு திரும்பும் போது தங்கள் கிராமத்தினுள் நிறுத்தாமல் பேருந்து வேறு வழிகளில் மாணவர்களை இறக்கி விடுவதினால் அவர்கள் பல கிலோமீற்றர் தூரம் நடந்து வீட்டிற்கு வரும் நிலைமை காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
எனினும் இது தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவிக்கப்பட்டும் அவர்கள் எந்த நடவடிக்கைகளும் இதுவரையில் எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவித்தனர்.
மேலும் எமது கிராமத்திற்குரிய போக்குவரத்து பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொள்ளவே குறித்த ஆர்ப்பாட்டத்தினை தாம் மேற்கொண்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேருந்திற்கு முன்னால் படுத்து மக்கள் ஆர்ப்பாட்டம்: வவுனியாவில் பதற்றம்
Reviewed by NEWMANNAR
on
September 15, 2016
Rating:

No comments:
Post a Comment