மன்னார் பஜார் பகுதியில் அமைந்துள்ள கருவாட்டுக்கடை ஒன்று தீக்கிரையானது….படங்கள் இணைப்பு
மன்னார் நகரப்பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் இருக்கின்ற கருவாட்டுகடைத்தொகுதியில் உள்ள கருவாட்டுக்கடை ஒன்று தீக்கிரையானது. இன்று 15-09-2016 மதியம் 12-00-1-00 இடைப்பட்ட மணிநேரத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் கடை உரிமையாளரான S.M.நபீள் என்பரிடம் வினாவியபோது தான் இப்பகுதியில் கடந்த 7வருடங்களாக இக்கடையினை நடத்தி வருவதாகவும் ஒழுங்கான முறையில் நகரசபைக்கு பணம் செலுத்தி வருவதாகவும் இரண்டரை இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்-இறால்-திருக்ககை-கணவாய் இன்னும் இதர காருவாடுகள் தீயில் கருகி நாசமாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக உங்களுக்கு யார் மீதும் சந்தேகம் என்று வினாவியபோது
எனக்கு ஒருவர் மீதும் சந்தேகம் இல்லை இருப்பினும் மறைவுப்பகுதி என்பதால் சிறுநீர் கழிப்பதற்கும் புகைப்பதற்கும் இந்தப்பக்கம் பலர் ஒதுங்குவதுண்டு அப்படி ஒதுங்கும் வேளையில் புகைத்தவர் தற்செயலாக வீசிய மிகுதி பீடியோ,கோர்லீப் துண்டுகள் மூலம் தீப்பிடித்து இருக்கக்கூடும் என நினைக்கின்றேன்.
திருநாள் (ஹச்சுப்பெருநாள்) காலமென்பதால் மதியம் 12மணியளவில் கடையினை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றிருந்தேன் தொலைபேசியில் வந்த அழைப்பு பஜாரில் கருவாட்டுக்கடை ஒன்று எரிகின்றது என்றார்கள் வந்து பார்க்கின்றேன் அது எனது கடை 250000 இரண்டரை இலட்சம் ரூபாயினை இழந்து நிற்கின்றேன்.
-தகவல்-கஜேந்திரன்-
மன்னார் பஜார் பகுதியில் அமைந்துள்ள கருவாட்டுக்கடை ஒன்று தீக்கிரையானது….படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
September 15, 2016
Rating:

No comments:
Post a Comment