வாகனங்களுக்கு தடை விதித்த பாரிஸ்: காரணம் என்ன? பிரான்ஸ்
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அரை நூற்றாண்டு பழமையான வாகனங்களுக்கு தடை விதித்ததால் பொதுமக்கள் சாலை வழியே நடந்தும் மிதிவண்டியிலும் சென்றுள்ளனர்.
பாரிஸ் நகரம் வாகன நெரிசல் மற்றும் மாசு காரணமாக கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதன் காரணமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் பாரிசில் world car free day கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக அரை நூற்றாண்டுகள் பழமையான வாகனங்களை பாரிஸ் நிர்வாகம் தடை செய்துள்ளது.
இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்தும் மிதிவண்டிகளை பயன்படுத்தியும் இந்த தினத்தை கொண்டாடியுள்ளனர். இந்த ஒரு நாள் மட்டும் வாகன நெரிசல் குறைந்து பாரிஸ் முழுவதும் 400 மைல்கள் வெறிச்சோடி காணப்பட்டதாக கூறப்படுகிறது.
கார் இல்லா தினத்தை பாரிஸ் மக்கள் கொண்டாடுவது இது முதன்முறையாக அல்ல, நகர மேயர் ஆன் ஹிடால்கோ தலைமையில் கடந்த ஆண்டு இதற்கான முயற்சிகள் துவங்கப்பட்டு அந்த ஆண்டே வாகனமில்லா தினத்தை பாரிஸ் மக்கள் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
அதனையடுத்து ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறன்று இதுபோன்று வாகனமில்லா தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
மட்டுமின்றி குறிப்பிட்ட பகுதிகளில் வாகனங்களின் வேகத்தை மணிக்கு 20 கி.மீற்றர் எனவும் குறைத்துள்ளனர். வாகனமில்லா தினத்தன்று மட்டும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவறு அரசு பேருந்துகள் அனைத்தும் அன்று ஒரு நாள் மட்டும் இலவசமாக இயக்குகின்றனர்.
வாகனங்களுக்கு தடை விதித்த பாரிஸ்: காரணம் என்ன? பிரான்ஸ்
Reviewed by Author
on
September 26, 2016
Rating:

No comments:
Post a Comment