கடலில் பிடிக்கும் மீன்களை கடலிலேயே கொட்டும் அவலம்
மட்டக்களப்பு வாகரை மாங்கேணி கடலில் சாளச் சூடை எனப்படும் மீன்கள் அதிகளவு பிடிபடுவதனால் இதன் விற்பனை விலையில் வீழ்ச்சி காணப்படுவதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தற்போது இதன் விலை கிலோ 20 ரூபாவிற்கு விற்பனையாகிறது. அத்துடன் சில மீனவர்கள் இதனை விற்பனை செய்ய முடியாமல் அவற்றினை காகம் மற்றும் நாய்களுக்கு உணவாக வழங்கியதுடன் கடலிலும் கொட்டும் நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
தாம் ஒரு தடவை கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு 1500 ரூபா மண்ணெண்ணெய் செலவாகிறது என்றும் தற்போது இந்த மீன் இனமே அதிகளவு பிடிபடுவதனால் வியாபாரிகள் அதனை கொள்வனவு செய்வதில் விருப்பம் காட்டவில்லை என்றும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இங்கு பல தரப்பட்ட மீன்கள் பிடிக்கப்பட்ட போதிலும் கீரி மீன்கள், சீலா மீன்கள், நுகர மீன்கள் சூடை மீன்கள் மற்றும் சாளச் சூடை மீன்களே அதிகம் பிடிபடுகின்றன.
தற்போது கீரி மீனின் விலை ஒரு கிலோ 200 ரூபாவும், நுகர மீன்கள் ஒரு கிலோ 80 ரூபாவும் என விற்பனையாகிறது. இனி வரும் மாதங்களில் கீரி மீனின் விலையிலும் வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இதேபோன்று கடந்த வருடம் கீரி மீன் கிலோ 20 ரூபாவிற்கும் விற்பனை செய்துள்ளோம் என்கின்றனர்.
இதில் வியாபாரிகளே அதிகளவு நன்மை பெறுவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
கடலில் பிடிக்கும் மீன்களை கடலிலேயே கொட்டும் அவலம்
Reviewed by NEWMANNAR
on
September 26, 2016
Rating:

No comments:
Post a Comment