அண்மைய செய்திகள்

recent
-

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்: துடிதுடித்து பலியான சிறுவன்....


தமிழகத்தில் ஒன்பது வயதே ஆன பள்ளி சிறுவன் மீது டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டதில் உள்ள வாணியம்பாடியை சேர்ந்தவர் மன்சூர் அகமது.

இவருடைய மகன் பெயர் முகமது ஈசான்(9), இவன் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பு படித்து வருகிறான்.

அவன் படிக்கும் பள்ளியில் தற்போது பரிட்சை நடைபெற்று வருவதால், ஞாயிற்றுகிழமையான நேற்றும் அவருக்கு பள்ளி இருந்துள்ளது.

இதனையடுத்து முகமது ஈசானின் தாத்தா அவனை பள்ளியில் கொண்டு விடுவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் அவனை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர்கள் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தது.

இந்த நேரத்தில் பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு டிராக்டரின் சக்கரம் கீழே விழுந்து கிடந்த சிறுவன் முகமது மீது ஏறி இறங்கியதில் அவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பொலிசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்: துடிதுடித்து பலியான சிறுவன்.... Reviewed by Author on September 26, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.