அண்மைய செய்திகள்

recent
-

அகதிகள் நாடுகடத்தப்படுவதை மருத்துவர்கள் தடுக்கிறார்கள்: ஜேர்மனி அரசு பகிரங்க குற்றச்சாட்டு...


ஜேர்மனி நாட்டில் புகலிடம் மறுக்கப்பட்ட அகதிகளை தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்ப முடியாமல் மருத்துவர்கள் தடுத்து வருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

ஜேர்மன் உள்துறை அமைச்சரான Thomas De Maiziere என்பவர் நேற்று முன் தினம் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

அப்போது, புகலிடம் மறுக்கப்பட்ட நிலையில் ஜேர்மனியில் சுமார் 5 லட்சம் அகதிகள் உள்ளனர்.

இவர்களை தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்புவதில் எண்ணற்ற சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக, புகலிடம் மறுக்கப்பட்ட ஒரு அகதியை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்ப 50,000 யூரோ வரை அரசுக்கு செலவாகிறது.

இதேபோல், பெரும்பாலான அகதிகளை திருப்பி அனுப்புவதற்கு தேவையான மருத்துவ ஆவணங்களை வழங்காமல் மருத்துவர்கள் தடுத்து வருகின்றனர்.

இதனால், அகதிகளை அவர்களின் தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்ப முடியாத சூழல் ஏற்படுகிறது. புகலிடம் மறுக்கப்பட்ட அகதிகளின் மருத்துவ அறிக்கையை வழங்காமல் புறக்கணிப்பது அரசாங்கத்திற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருவதாக உள்துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

எனினும், உள்துறை அமைச்சரின் இக்குற்றச்சாட்டை ஜேர்மன் மருத்துவர்கள் சங்கம் கடுமையாக எதிர்த்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் தலைவரான Frank Ulrich Montgomery என்பவர் வெளியிட்டுள்ள தகவலில், போதுமான ஆதாரம் இல்லாமல் அகதிகளை திருப்பி அனுப்புவதில் மருத்துவர்கள் மீது குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது.

புகலிடம் மறுக்கப்பட்ட அகதிகளுக்கு ஆதரவாக மருத்துவர்கள் எவ்வித செயலிலும் ஈடுப்படவில்லை என Frank Ulrich Montgomery உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

அகதிகள் நாடுகடத்தப்படுவதை மருத்துவர்கள் தடுக்கிறார்கள்: ஜேர்மனி அரசு பகிரங்க குற்றச்சாட்டு... Reviewed by Author on September 26, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.