ஆயுதப்போர் மட்டுமல்ல அகிம்சை போரையும் எங்களினால் நடாத்த முடியும் ஜீ.குணசீலன்.- Photos
தமிழர் போராட்ட வரலாற்றில் அரசியல் போர்,ஆயுதப்போர் மட்டுமல்ல அகிம்சை போரையும் எங்களினால் நடாத்த முடியும் என காட்டி சிறந்த உதாரணமாக இருந்தது தியாகி திலீபன் என்பவருடைய உண்ணாவிரதமும்,இறப்பும்.என வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்காக 1987ஆம் ஆண்டு அகிம்சை வழியில் போராடித் தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாகி திலீபனின் 29 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை (26) தமிழர் தாயகப்பகுதிகளில் அனுஸ்ரிக்கப்பட்டது.
இந்த நிலையில் என வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தனது இல்லத்தில் தியாகி திலீபனின் நினைவு தினத்தை இன்று மாலை அனுஸ்ரித்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
நாங்கள் பல்வேறு வழிகளில் எமது செய்திகளை சர்வதேசத்திற்கும்,இலங்கை அரசாங்கத்திற்கும் தெரியப்படுத்தி இருந்தும்,எமது உரிமைக்கான குரல் ஒரு இடங்களிலும் உண்மையான வகையில் செவி மடுக்கப்படவில்லை.
இந்தியா ஒரு அகிம்சை நாடு,காந்தி என்கின்ற அகிம்சை வாதி வெள்ளையனுக்கு எதிராக போரிட்டு பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தை மதிக்கின்ற ஒரு நாடு என பீற்றிக்கொள்ளுகின்ற இந்தியா அதே போன்று ஒரு அகிம்சை போராட்டத்தை, ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்த எங்களின் தியாகி திலீபனினுடைய இலட்சியத்தை கருத்தில் கொள்ளாது,சொந்த சுய இலாபத்திற்காக அத்தியாகியை பலிவாங்கியது.
ஆகவே இன்றைய தினம் தியாகி திலீபனுடைய நினைவு நாளில் மீண்டும் ஒரு முறை எங்களை அடக்கி ஒடுக்கி எங்களுடைய உரிமைகளை தர மறுக்கின்ற சர்வதேசத்திற்கும்,இலங்கை அரசாங்கத்திற்கும் ஏன் இந்தியாவிற்கும் மீண்டும் ஓர் அகிம்சை வழியில் அரைகூவல் விடுக்கின்றோம் நீதியையும், நியாயத்தையும்,மனித உரிமையையும் மதித்து சிறந்த தீர்ப்பலிக்க மனட்சாட்சியுடன் முன் வரவேண்டும் என்பதனை இன்றைய தினத்தில் நாங்கள் விடுகின்ற செய்தியாகும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
ஆயுதப்போர் மட்டுமல்ல அகிம்சை போரையும் எங்களினால் நடாத்த முடியும் ஜீ.குணசீலன்.- Photos
Reviewed by NEWMANNAR
on
September 26, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 26, 2016
Rating:


No comments:
Post a Comment