அண்மைய செய்திகள்

recent
-

வயல் காணிகளை வனவள அதிகாரிகள் சுவீகரிக்கப்படுவதை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


அம்பாறை ஆலையடி வேம்பு திருக்கோவில் பிரதேச செயலக்கப் பிரிவுக்குட்பட்ட 2000 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்புக்கு மேற்றப்ட்ட வயல் காணிகளை வனவள அதிகாரிகள் நில அளவை செய்து சுவீகரிக்கப்படும் செயற்பாட்டைக் கண்டித்து இன்று வியாழக்கிழமை(15) ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் முன்னாள் விவசாயிகள் ஆர்ப்பாட்ட பேரணியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள 6 கண்டங்களான தோணிக்கல், டிப்பமடு, பெரியதுலாவை, தோணிக்கல் மேல் கண்டம், தென்கண்டம். வடகண்டம் ஆகிய பிரதேசங்களின் 2000 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்புக்கு மேற்றப்ட்ட வயல் காணிகளை வனவள அதிகாரிகள் நில அளவை செய்து சவீகரிக்கும் நடவடிக்கையைக் கண்டித்து விவசாய அமைப்புக்கள் ஆர்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்

இவ் அழைப்பையடுத்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் இன்று காலை 9 மணியளவில் சாகாம வீதியிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேச பொதுச் சந்தைக்கட்டிடத்திற்கு முன்னாள் ஓன்று திரண்டு ஆர்ப்பாட்ட பேரணியினை ஆரம்பித்தனர் இதில் சந்திரிக்கா அம்மையார் கையப்பத்துடன் வழங்கப்பட் காணி அளிப்பு செல்லுபடியற்றதா? அரசே காணிகளுக்கு தீர்வை பெற்றுத்தாருங்கள், எந்த ஆட்சியிலும் நடைபெறாத விவசாய நில சுவீகரிப்பு நல்லாட்சியில் நடைபெறுவதா? அரசே ஏழை விழவசாயிகளின் வயிற்றில் அடிப்பது நல்லாட்சியா? வுன அதிகாரியே காட்டுக்கும் வயலுக்கும் வித்தியாசம் தெரியாதா? அரசே காடா? மிருகமா? மக்களா? போன்ற வாசகங்களுடனான சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு சாகாம வீதி ஊடாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக்தினை சென்றடைந்து பிரதேச செயலகத்திற்கு முன்னாள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனா.

இப் பிதேசத்தில் 1962 ம் ஆண்டுக்கு முன்னர் ஆரம்பத்தில் சேனைப் பயிர் செய்கை செய்துவந்த பின்னர் வயல் காணிகளாக மாற்றப்பட்டு; வேளாண்மை செய்துவருவதாகவும்; பன்னலகம குளத்தினூடாக நீர்ப்பாசனம் வழங்கப்பட்டு வருவதாகவும் 1969 ஆண்டு நடாத்தப்பட்ட காணிக் கச்சேரியூடாக இக் காணிகளுக்கு அனுமதிப் பத்திரங்களை விவசாயிகள் பெற்றுக் கொண்டனர் இதன் பின்னர் முன்ளாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்காவினால் ஜயபூமி காணி உறுதி காணிப் பத்திங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் கடந்த 2010 -10- 01 ம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் குறித்த எல்லைக்குட்பட்ட காணிகள் வன இலாகாவுக்குச் சொந்தமானதென்று அறிவிக்கப்பட்டுள்ளது இவ் அறிவித்தலுக்கு முன்னர் குறித்த காணிகள் சட்டரீதியாக அளவீடு செய்யப்படாமலும் இது தொடர்பில் காணி உரிமையாளர்களுக்கு பிரதேச செயலகத்திற்கும் அறிவிக்காமல் இக்காணிகளை வனவள திணைக்களம் சுவீகரிப்பதற்கு எல்லைக் கல்கல் நாட்டிவருவதுடன் எங்கள் காணிகளில் வேளாண்மை செய்யவிடாமல் தடுத்துவருகின்றனர் எனவே எங்களது காணிகளை மீட்டுத்தருமாறும் கோரிக்கைவிடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் மற்றும் அம்பாரை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் கே .விமலநாதன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் , திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயராஜன் ஆகியோரிடம் விவசாயிகள் மகஜரை கையளித்தனர்

இதனை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் விவசாயிகள்pடம் இது தொடர்பாக சம்மந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி இதற்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்ததுடன் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் 10 பேரை அழைத்து பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் இடம் பெற்றதையடுத்து ஆர்ப்பர்டகாரர்கள் பகல் 12 மணிக்கு கலைந்து சென்றனர்.
வயல் காணிகளை வனவள அதிகாரிகள் சுவீகரிக்கப்படுவதை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் Reviewed by NEWMANNAR on September 15, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.