அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பேசாலை அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய தேவஸ்தான பரிவார மூர்த்திகளுக்கான கும்பாபிஷேகம்.....


மன்னார் பேசாலை அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய தேவஸ்தான பரிவார மூர்த்திகளான நவக்கிரகம், வைரவர் மற்றும் மணிக்கோபுரம் ஆகியவற்றுக்கான மஹா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (15.09.2016) பிரதிஸ்ட பிரதம குரு சிவாகம துரந்தார், வித்தியா சிரோண்மணி, கிரியா ஜோதி, தேசசக்தி, சிவஸ்ரீ.மஹா தர்மகுமார குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
இவ் கும்பாபிஷேக பூசைகளில்.........
  • எழுத்தூர் அகிலாண்டடேஸ்வரி ஆலய பிரதம குரு சிவஸ்ரீ வீர விஐயபாபுக் குருக்கள், 
  • மன்னார் இராஐராஜேஸ்வரி அம்மன் ஆலய குருக்கள் பிரமஸ்ரீரி மனோ ஐங்கர சர்மா, 
  • முள்ளியவளை குருக்கள் பிரமஸ்ரீ ந.ஜெகதீஸ்வர சர்மா,
  •  மன்னார் சித்திவிநாயகர் ஆலய குருக்கள் பிரமஸ்ரீ பூ.சிவரூபக் குருக்கள் ஆகியோரும் இவ் பூசை வேளைகளில் கலந்து கொண்டனர்.

02.09.2016 வெள்ளிக் கிழமை ஆரம்பிக்கப்பட்ட கிரியை 03.09.2016 எண்ணைக்காப்பும் 04.09.2016 ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 15.09.2016 காலை 9.30 மணிக்கு அஷ்டோத்திர சத சங்காபிஷேகம் இடம்பெற்றது.இவ் நிகழ்வு நாட்களில் மகேஸ்வரப் பூஜைகளும் (அன்னதானம்) இடம்பெற்றன.
 இன்றையத் தினம் பேசாலை உதயபுரம் ஸ்ரீ துர்க்கம்மையன் ஆலயத்திலிருந்து பேசாலை அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்துக்கு பக்தர்கள் பறவை காவடி பால்காவடி எடுத்து வந்திருந்தனர். இவ் நிகழ்வில் அயல் கிராம பக்தர்களும் உள்ளூர் மக்கள் என பலரும் ஆலய சடங்குகளில்  கலந்து கொண்டதோடு  ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமிகளின் அருள் பெற்றுச்சென்றனர்.












மன்னார் பேசாலை அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய தேவஸ்தான பரிவார மூர்த்திகளுக்கான கும்பாபிஷேகம்..... Reviewed by Author on September 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.