அண்மைய செய்திகள்

recent
-

77 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானதாக கருதப்பட்ட கப்பல் கண்டுபிடிப்பு!


77 ஆண்டுகளுக்கு முன்னர் மாயமான பிரித்தானிய சரக்கு கப்பல் ஒன்றை கண்டு பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் இருந்து பழங்கள் நிரப்பிய கப்பல் ஒன்று 1939 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகர் நோக்கி பயணமாகியுள்ளது.

இந்த கப்பலானது கேப்கோட் கடற்பகுதியில் தரைதட்டவே அப்பகுதி மக்களை இந்த கப்பலில் இருக்கும் பழங்களை கரையிறக்குவதற்காக வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.

ஆனால் குறிப்பிட்ட கப்பலை அதற்கு பின்னர் அந்த பகுதியில் இருந்து எவரும் பார்த்தது இல்லை என கூறப்படுகிறது. குறிப்பிட்ட கப்பலானது மாயமானதாக அந்த கப்பல் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையிலும் உரிய தகவல் கிடைக்காமல் போகவே, கப்பல் மாயமானது குறித்து உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் நீண்ட 77 ஆண்டுகளுக்கு பின்னர் ஆர்லியன்ஸ் பகுதி கடற்கரையில் குறிப்பிட்ட கப்பல் மேலெழும்பியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

கடல் அளவையாளர் ஜான் பெர்ரி பிஷ் என்பவரால் குறிப்பிட்ட மாயமான கப்பல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. 155 அடி நீளம் கொண்ட குறிப்பிட்ட கப்பலானது பயணத்தினிடையே கரைதட்டியதால் சில நாட்கள் அப்பகுதியிலேயே சிக்கியிருந்துள்ளது.

கப்பலை கடலுக்குள் தள்ளி நீக்கும் நடவடிக்கைகள் தோல்வியில் முடியவே, கப்பல் சிக்கிய பகுதியும் கடுமையான புயலால் தாக்கப்பட்டு நிலைகுலைந்தது. இதனால் கப்பலில் உள்ள 230 டன் சரக்கினை இறக்க அப்பகுதி மக்களை வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.

ஆனால் அடுத்த நாளில் அப்பகுதியில் கடல் நீர் பெருக்கெடுக்கவே கப்பலும் நீரில் மூழ்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதில் பாதிக்கும் அதிகமான சரக்குகளும் கடலில் அமிழ்ந்தது.

77 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானதாக கருதப்பட்ட கப்பல் கண்டுபிடிப்பு! Reviewed by Author on October 05, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.