ஜிசாட்-18' செயற்கைகோள் ஏவுதலை ஒத்திவைத்தது இஸ்ரோ....
பிரான்சிலிருந்து விண்ணில் செலுத்தவிருந்த இஸ்ரோவின் 'ஜிசாட்-18' செயற்கைகோள், மோசமான வானிலை காரணமாக ஒருநாள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் பிரெஞ்ச் கயானாவின் 'கவ்ரவ்' ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் இஸ்ரோவின் 'ஜிசாட்-18' செயற்கைகோள் அக்டோபர் 5 ஆம் திகதி விண்ணில் செலுத்தப்படவிருந்தது.
இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக திட்டமிட்டபடி செயற்கைகோளை விண்ணில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், ஒருநாள் ஒத்தி வைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
தொலை தொடர்பு வசதியை வலுப்படுத்துவதற்காக, இஸ்ரோ வடிவமைத்த 'ஜிசாட்-18' செயற்கைகோள், 3,404 கிலோ எடை கொண்டது. 15 ஆண்டுகள் செயல்படும் இந்த செயற்கைகோளில் சூரியசக்தி மின்தகடுகள் மற்றும் ஜெனரேட்டரும் பொருத்தப்பட்டு உள்ளது.
ஜிசாட்-18' செயற்கைகோள் ஏவுதலை ஒத்திவைத்தது இஸ்ரோ....
Reviewed by Author
on
October 05, 2016
Rating:

No comments:
Post a Comment