அண்மைய செய்திகள்

recent
-

ஈழத்தமிழர் தொடர்பில் தலைலாமாவின் குழப்பமான கருத்திற்கு மேடையில் சிவருசி.சசிக்குமார் பதிலடி....


கலாநிதி. பிறிகிற்றா அவர்களின் நெறியாள்கையில் தலைலாமா தலைமையில் பேராளர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது.

பல சமயத்தலைவர்களும் பங்கெடுத்த இந்த கலந்துரையாடலில் சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் சைவநெறிக்கூடத்தின் சார்பில் கலந்துகொண்டார்.

சமயங்களின் சடங்குகள், பணிகள், ஆன்மீகம், மனிதனின் மேன்மை என இக்கலந்துரையால் பல விடயங்களைத் தொட்டுச் சென்றது. 81 வயதினை அடைந்திருக்கும் தலைலாமா உரையாற்றுகையில் தான் ஒரு பௌத்தனாக தன் சமயத்தை வாழ்வதாகவும், ஆன்மீக அனுபவத்தை மனிதர்களுடன் பகிர்வது தன் பணி எனவும் விளக்கினார்.
Dalai Lama Visit Switzerland
மேலும் இந்தியாவில் தான் வாழ்வதாகவும், அங்கு சமயத்தலைவர்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்ததாகவும் உரைத்தார்.

இந்து சமயத்தில் சாதியை ஒழியுங்கள். சாதி இன்றைய உலகிற்கு பொருந்தாது என்றார். சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் உடன் ஒரு பதிலை அளித்தார்.

இங்கு அமைந்திருக்கும் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் சாதிமறுப்புத் திருக்கோவில் ஆகும். நாங்கள் இங்கு சீர்திருத்த அன்புவழிச் சைவநெறியினை ஒழுகிறோம் என்றார்.

பதில் கேட்டு மகிழ்ச்சி தெரிவித்த தலைலாமா அவர்களிடம் ஒருகேள்வியை பொதுவரங்கில் சசி ஐயா அவர்கள் வினாவினார்:

'ஒரு தேசிய இனமான ஈழத்தமிழர்களாகிய நாங்கள் உலகில் புலம்பெயர்ந்து பல நாடுகளில் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு ஒரு நாடு இல்லை.

எங்களுக்கு இறையாண்மை உள்ள அரசு இல்லை. இங்கு எம்முடன் அருகில் அமர்ந்திருக்கும் குர்திஸ் இனத்தவர்கள் நிலையும் இதுவே. பல நாட்டில் நாங்கள் பலவாறு வேறுபட்டு

வாழ்ந்தாலும்இ நாங்கள் ஏதிலிகளே.

திபேத் இனத்தவர்களாகிய நீங்கள் கடந்து வந்த பாதையில் நாங்களும் காலத்தைக் கடந்து பயணிக்கின்றோம். ஆன்மீகத்தலைவராக உங்கள் ஆன்மீக அனுபவத்தில்இ எமது நிலைக்கும் உங்கள் நிலைக்கும் நிலவும் சூழலை எவ்வாறு எதிர்நோக்குகின்றீர்கள், உங்கள் மனநிலை எவ்வாறு உள்ளது?"

இதற்கு பதில் அளித்த தலைலாமா அவர்கள் தன் உரையினைத் தொடங்கும்போது தென்னிந்தியத் தமிழர்கள் என்ற சொற்பதத்தைப் பயன்படுத்தினார், இந்தியாவில் இருந்து குடியேறிய தமிழர்கள் எனவும் தன் உரையினைத் தொடர முற்பட்டபோது அதனை உடன் மறுத்த சிவருசி. சசிக்குமார் ஐயா அவர்கள் நாங்கள் தென்னிந்தியர்கள் அல்லர். ஈழத்தின் பூர்வீகத் தமிழர்கள் எனத் திருத்தி விளக்கினார்.

விளக்கத்தை ஏற்றுக்கொண்ட தலைலாமாஇ தன் சொல்லைத் திருத்தி, ஈழத்தமிழர்கள் தொடர்பில் அரசியல்ரீதியில் பதில்களிக்க எனக்கு அதிகாரம் இல்லை.

அதுபோல் குர்திஸ் இனத்திற்கும் அரசியல் ரீத்தியல் பதில் அளிக்க முடியாது. நான் ஒரு சமயத்தலைவர். அதன்படி சொல்வது உங்கள் உரிமைக்கா வன்றுமுறை அற்று தொடர்ந்து உறுதியாக போராடுங்கள்.

எனது அனுபவத்தில் திபேத்தியர் எங்கள் அறவழிப்போராட்டத்தினை ஏற்றுக்கொண்ட சீனமக்களும் உள்ளார்கள். ஏன் அவர்கள் திபேத்தின் உரிமையினை ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால், நாங்கள் அவர்களுக்கு வன்முறையில் எமது எதிர்ப்பை தெரிவிக்கவில்லை.

ஆகவே அவர்கள் எங்கள் அறப்போரை ஆதரிக்கின்றனர். அதுபோல் நீங்கள் உங்கள் உரிமைக்காக அறவழியில் உரத்துக்குரல் கொடுங்கள் என்றார்.

முந்நூறுக்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் இக்கலந்துரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

சைவநெறிக்கூடத்திற்கு 30 சிறப்பு இருக்கைக்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. சுவிசின் பல ஊடகங்களும் செய்திகளைப் பதிவுசெய்தன. சுவிஸ் அரசவானொலி நேரடி நிகழ்ச்சி நடாத்தியது.

14.00 மணிமுதல் 15.45 மணிவரை இப்பேராளர் கலந்துரையாடல் நடைபெற்றது. 8 சமயத்தவர்களும் தங்கள் உணர்வுகளைக் கலந்துரையாடலில் பங்கெடுத்து பகிர்ந்திருந்தனர்.


இந்த நிகழ்வினை சீர்தூக்கிப் பார்த்தால் தலைலாவரையும் ஈழத்தமிழர்கள் வரலாறு எவ்வாறு தவறாக பரப்புரை செய்யப்பட்டுள்ளது என்பதை ஈழத்தமிழர்கள் உணரக்கூடியதாக இருந்தது.

புலத்தில் தமிழர்கள் நாங்கள் எங்கு வாழந்தாலும், எங்கள் சரியான வராலற்றினையும், ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வின் உண்மையான காரணியையும் விளக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இன்று ஒரு தலைலாமாவிற்கு தமிழர்கள் தரப்பில் பதில் அளிக்க வாய்ப்பு அமைந்தது. உலகில் இன்னும் எத்தனையோ தலைலாமாக்களும், தலைவர்களும் தவறாகப் பரப்பப்படும்

பரபுபரைக்கு ஆளாகி உள்ளார்கள், தொடர்ந்து யாவரும் முயல்வோம் தமிழர் உண்மைகளை உலகிற்குப் புலப்படுத்த..

ஈழத்தமிழர் தொடர்பில் தலைலாமாவின் குழப்பமான கருத்திற்கு மேடையில் சிவருசி.சசிக்குமார் பதிலடி.... Reviewed by Author on October 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.