நீண்டநாட்களுக்கு பிறகு வந்தது கொங்றீற் வீதி .......இன்னும் 45வீதிகள் அபிவிருத்திக்காக தெரிவாகியுள்ளது….
மன்னார் மாவட்டம் தற்போது அபிவிருத்திப்பணியில் மகிழ்ச்சியளிக்கின்றது. 1ம் ஒழுங்கை எமில்நகர் மன்னார் பாதையானது குண்டும் குழியுமாக இருந்த பாதையானது. தற்போது கொங்றீற் பாதையாக 500மீட்டருக்கு நீண்டுள்ளது.
இது நீண்ட நாள் வேண்டுகோள் இடைவிடாத முயற்சியாலும் பல இடைஞ்சல்களுக்கு மத்தியிலும் எமக்கு இப்பாதையானது கிடைத்துள்ளது. உள்ளுராட்சி அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ் தேவையின் அடிப்படையில் சுமார் 4மில்லியன் (40இலட்சம்) ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளதுடன் வடிகால் வசதிக்கான நிதியில்லாமையினால் வாய்க்கால் பாதை ஆரம்பத்திலும் முடிவிலும் வரும் பெரிய அளவில் வடிகால் மதகு அமைத்துதருவதாகவும் மழைவருவதற்கு முன்பு இரண்டு பக்கமும் மழை நீர் ஓடுவதற்காக வாய்க்கால் வெட்டிவிடுவதாகவும் தெரிவித்தார்.
இன்னும் எத்தனை வீதிகள் புனரமைக்கப்படவுள்ளது என நகரசபைச்செயலாளர் அவர்களிடம் வினாவியபோது…….
அத்தோடு மன்னார் மாவட்டத்தின் இன்னும் பல உள்ளகவீதிகள் திருத்தும்பணிகள் நடைபெறவுள்ளது. அதாவது தேவையின் அடிப்படையில் ஜெய்க்கா அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 10கிலோமீற்றர் பரப்பளவினை உடைய 16 வீதிகளும கொங்றீற் பாதையாகவும்; ADP திட்டத்தின் கீழ் 17கிலோமீற்றர் பரப்பளவினை உடைய 29 வீதிகளும் காப்பெற் பாதையாகவும் அமைப்பதற்கான திட்டவரைபும் அனுமதியும் பெறப்பட்டுள்ளதோடு முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வருட இறுதிக்குள் அல்லது புதுவருடதொடக்கத்திற்குள் அபிவிருத்திப்பணிகள் பூர்த்தி செய்யப்படும் அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது கொஞ்சம் பொறுமையாக இருங்கள் நிச்சயமாக 45 வீதிகளும் அபிவிருத்தி செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்…
மன்னார் நகரசபைச்செயலாளர் அவர்களையும் அவருடன் இணைந்து பணியாற்றும் அத்தனை அலுவலர்களையும் பாராட்டி நிற்கின்றோம் பணிகள் தொடரட்டும்……
நீயூமன்னார் இணையத்திற்காக -வை-கஜேந்திரன்-
நீண்டநாட்களுக்கு பிறகு வந்தது கொங்றீற் வீதி .......இன்னும் 45வீதிகள் அபிவிருத்திக்காக தெரிவாகியுள்ளது….
Reviewed by Author
on
October 12, 2016
Rating:

No comments:
Post a Comment