இலங்கையர் ஒருவர் மதுரையில் இருந்து திருச்சி செல்லும் வழியில் மரணம்
மதுரை விமானநிலையத்தில் இருந்து திருச்சிக்கு வாடகை கார் ஒன்றின் மூலம் சென்று கொண்டிருந்த இலங்கை தமிழர் ஒருவர் மரணமாகியுள்ளார்.
கே.கே நகரை சேர்ந்த 62 வயதான என் கனகராஜ் என்பவரே இவ்வாறு மரணமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
திருச்சியில் இருந்து கொலுசுக்களை இலங்கைக்கு கொண்டு சென்று விற்பனை செய்த பின்னர் அங்கிருந்து இந்தியாவுக்கு பொருட்களை கொண்டுவரும் வர்த்தகத்தில் கனகராஜ் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த புதன் கிழமையன்று இலங்கையில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு வந்திறங்கிய அவர், சுகவீன நிலையை உணர்ந்துள்ளார்.
இதனையடுத்து வாடகை கார் ஒன்றில் திருச்சி நோக்கி பயணித்துள்ளார். எனினும் இடையில் மூச்சுத்தினரிய நிலையில் திருச்சி வைத்தியசாலையில் பொலிஸாரின் உதவியுடன் சேர்க்கப்பட்டுள்ளார். இதன்போதே கனகராஜ் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கையர் ஒருவர் மதுரையில் இருந்து திருச்சி செல்லும் வழியில் மரணம்
Reviewed by NEWMANNAR
on
October 21, 2016
Rating:

No comments:
Post a Comment