குழந்தைகளை வளர்க்க எந்த நாட்டை சேர்ந்த பெற்றோர் அதிகம் செலவிடுகின்றனர்? ஏனைய நாடுகள்....
குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய அதிக செலவினங்களை செய்து வரும் பெற்றோர்கள் பிரித்தானிய நாட்டை சேர்ந்தவர்கள் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
குழந்தைகள் பிறந்தது முதல் கல்வி கற்பது வரை அவர்களுக்கு தேவையான அனைத்து செலவினங்களையும் எந்த நாட்டை சேர்ந்த பெற்றோர் அதிகம் செலவிடுகின்றனர் என்ற ஆய்வு ஒன்று அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.
இதில் OECD நாடுகளில் ஒன்றான பிரித்தானிய முதல் இடம் பிடித்துள்ளது.
ஒட்டுமொத்த நாடுகளிலும் குழந்தைகளை வளர்க்க ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த வருமானத்தில் சராசரியாக 15 சதவிகிதம் செலவிடப்படுகிறது
ஆனால், பிரித்தானிய நாட்டை சேர்ந்த பெற்றோர் தங்களது குழந்தைகளை வளர்க்க ஒட்டுமொத்த வருமானத்தில் சராசரியாக 33.8 சதவிகிதத்தை செலவிடுகின்றனர்.
இந்த ஆய்வில் வெளியான முதல் 10 நாடுகளின் பட்டியல் இதோ !
1. பிரித்தானியா - 33.8 சதவிகிதம்
2. நியூசிலாந்து - 29
3. ஐயர்லாந்து - 27.4
4. அமெரிக்கா - 25.6
5. சுவிட்சர்லாந்து - 24.1
6. கனடா - 22.2
7. நெதர்லாந்து - 20.2
8. லக்ஸம்பேர்க் - 16.9
9. ஸ்லோவாகியா - 16.9
10. பின்லாந்து - 16.8
மேலும், OECD(Organisation for Economic Co-operation and Development) அமைப்பில் இந்தியா மற்றும் இலங்கை உறுப்பினராக இல்லாத காரணத்தினால் இப்பட்டியலில் இரு நாடுகளும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளை வளர்க்க எந்த நாட்டை சேர்ந்த பெற்றோர் அதிகம் செலவிடுகின்றனர்? ஏனைய நாடுகள்....
Reviewed by Author
on
October 12, 2016
Rating:

No comments:
Post a Comment