அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள'இளைஞர் படையணி'பயிற்சி நிலையத்தில் நிலை கொண்டுள்ள விசேட அதிரடிப்படையினர் வெளியேற்றப்பட்டு உரிய திணைக்களத்திடம் கையளிக்க நடவடிக்கை- செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள 'இளைஞர் படையணி' பயிற்சி நிலையத்தில் நிலை கொண்டுள்ள விசேட அதிரடிப்படையினர் வெளியேற்றப்பட்டு குறித்த இளைஞர் படையணி பயிற்சி நிலையம் உரிய திணைக்களத்திடம் நாளை செவ்வாய்க்கிழமை (1) கையளிக்கப்படவுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் கடந்த பல வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட குறித்த 'இளைஞர் படையணி' பயிற்சி நிலையம் நாட்டில் ஏற்பட்டிருந்த யுத்தம் காரணமாக இராணுவ முகாமாக மாற்றப்பட்டது.


பின் இராணுவம் குறித்த பயிற்சி நிலையத்தில் இருந்து வெளியேற விசேட அதிரடிப்படையினரின் பாரிய முகாமாக குறித்த நிலையம் மாற்றப்பட்டது.

தற்போது வரை விசேட அதிரடிப்படையினர் குறித்த பயிற்சி நிலையத்தை விசேட அதிரடிப்படையினரின் முகாமாக மாற்றி செயற்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த இளைஞர் படையணி' பயிற்சி நிலையத்தை உரிய திணைக்களத்திடம் மீள ஒப்படைக்க வேண்டும் என நடவடிக்கைகளை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறித்த விடையம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

குறித்த 'இளைஞர் படையணி' பயிற்சி நிலையத்தின் தற்போதைய நிலவரம் தொடர்பில் அவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குறித்த பயிற்சி நிலையத்தில் நிலை கொண்டுள்ள விசேட அதிரடிப்படையினர் வெளியேற்றப்பட்டு உரிய திணைக்களத்திடம் நாளை செவ்வாய்க்கிழமை (1) கையளிப்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள'இளைஞர் படையணி'பயிற்சி நிலையத்தில் நிலை கொண்டுள்ள விசேட அதிரடிப்படையினர் வெளியேற்றப்பட்டு உரிய திணைக்களத்திடம் கையளிக்க நடவடிக்கை- செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. Reviewed by NEWMANNAR on October 31, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.