விமானநிலையங்களில் வெடித்து சிதறும் கேலக்ஸி: உற்பத்தியை நிறுத்திய சாம்சுங்
சாம்சுங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்களின் பேட்டரிகள், சார்ஜ்போடும் போது தீப்பிடித்து எரிவதாக வெளியாயின புகாரை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 7 உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதனை உறுதிப்படுத்த சாம்சங் நிறுவனம் மறுத்து விட்டது. ஸ்மாட் போன் உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களில் முக்கிய பங்கு வகிக்கும் சாம்சுங், நிறுவனம் கேலக்ஸி நோட் 7 என்ற புதிய தொலைபேசியை அண்மையில் அறிமுகம் செய்தது. இதனை பயன்படுத்திய அமெரிக்க மற்றும் கொரிய வாடிக்கையாளர்கள், இந்த தொலைபேசியை சார்ஜ் செய்யும் போது வெடித்து சிதறுவதாக புகார் தெரிவித்தனர்.
மேலும் அதிகமாக சூடாவதாகவும், விமனநிலையங்களில் போது வெடித்து தீப்பற்றுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து அனைத்து சாம்சுங் கேலக்ஸி நோட் 7 மாடல் ஸ்மார்ட் தொலைபேசியை திரும்பபெறுவதாக அறிவித்தது சாம்சங்.
இதன்பின்னர் ஆய்வக பரிசோதனையில் பேட்டரி குறைபாடுகள் உள்ளதை அறிந்த சாம்சுங் நிறுவனம், அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டது.
பின்னர் சில தொலைபேசிகளை மாற்றியும் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது. அவ்வாறு மாற்றம் செய்து வழங்கிய தொலைபேசிகளில் 3 வாடிக்கையாளர்களின் தொலைபேசிகள், சார்ஜ் செய்யும் போது மீண்டும் தானாக தீப்பிடித்ததுள்ளது.
இதையடுத்து நோட்-7 உற்பத்தியை சாம்சங் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்க தகவலை கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ச்சியாக சிக்கி வரும் சாம்சங் நோட் 7 தொலைபேசிகளை விமானங்களில் பயன்படுத்த இலங்கை விமானநிலையத்தில் தடை விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
விமானநிலையங்களில் வெடித்து சிதறும் கேலக்ஸி: உற்பத்தியை நிறுத்திய சாம்சுங்
Reviewed by Author
on
October 11, 2016
Rating:

No comments:
Post a Comment