"தற்காலிக முதல்வர்" ஆனார் ஓ.பன்னீர் செல்வம்! ஆளுநர் அறிவிப்பு.....
முதல்வர் ஜெயலலிதா வசம் உள்ள உள்துறை உள்ளிட்ட முதல்வர் கவனித்த பணிகள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பில், '
முதல்வர் ஜெயலலிதா வசம் உள்ள உள்துறை உள்ளிட்ட முதல்வர் கவனித்த பணிகள் நிதியமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வரின் ஆலோசனையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டங்களுக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார்.
இலாகா இல்லாமல், ஜெயலலிதா தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிப்பார்.
முதல்வர் ஜெயலலிதா நலம் பெற்று திரும்பும் வரை இந்த ஏற்பாடு தொடரும் என்று அறிவித்துள்ளார்.

"தற்காலிக முதல்வர்" ஆனார் ஓ.பன்னீர் செல்வம்! ஆளுநர் அறிவிப்பு.....
Reviewed by Author
on
October 12, 2016
Rating:

No comments:
Post a Comment