யாழில் திடீர் சுற்றிவளைப்பு: 10பேர் கைது
யாழில் சில பகுதிகளில் நேற்று இரவு பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்குரிய 10 பேரை கைது செய்துள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
துன்னாலை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களை மீளவும் தாக்குவதற்காக அண்மையில் வாள்களுடன் ஒரு குழு வைத்தியசாலைக்குள் புகுந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக நேற்று இரவு நெல்லியடி, பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.
இதன் போதே சந்தேகத்தின் பேரில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும், இவ்வாறு கைது செய்த நபர்களை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்றும் மற்றையவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் திடீர் சுற்றிவளைப்பு: 10பேர் கைது
Reviewed by Author
on
November 04, 2016
Rating:

No comments:
Post a Comment