மன்னாரில் காலையில் நடந்தது என்ன….???.மன்னார் மீனவர்களே…முழுமையான படங்கள் இணைப்பு…
மன்னாரில் காலையில் மீன்பிடிக்கசென்ற மீனவர்களை தடுத்து நிறுத்திய கடற்படையினர் பெரிய பாலத்தடியில் இருந்து வழமையாக மீன்பிடிக்க செல்வது போல இன்று காலையில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களையே கடற்படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
காரணம் என்னவென்றால் ஒரு படகில் 3வருக்கு மேல் செல்லக்கூடாதாம் அதற்கு மீன்புடி அமைச்சினால் அதிகாரமளிக்கப்பட்ட கடிதம் உள்ளதாம் அத்தோடு கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு பாஸ் நடைமுறையானது யுத்தகாலத்தில் இருந்தது ஏன் எனில் புலிகளின் ஊடுருவல் பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி பாஸ் நடைமுறையை உருவாக்கி இருந்தீர்கள் தற்போது புலிகள் இல்லை முற்று முழுதாக அழித்துவிட்டீர்கள் நடக்கும் அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கம் அல்லவா…. அப்படியிருப்பின் ஏன் இந்த கெடுபிடி…..
காலையில் பனங்கட்டுகொட்டு சாந்திபுரம் சின்னக்கடை பெரியகடையினைச்சேர்ந்த மீனவர்கள் கடற்றொழில் ஈடுபடமுடியாது என தடுத்துள்ளனர். காரணம் கேட்டதிற்கு புதிய பாஸ் நடைமுறைக்கு வருவதாகவும் அதைப்பெற்றுக்கொண்ட பின்பே தொழிலில் ஈடுபடமுடியும் விரக்தியடைந்த மீனவர்கள் என்ன பாஸ் என்று கேட்டதிற்கு வழமையாகவே வோட்டிற்கும் இஞ்ஞினுக்கும் பாஸ் கட்டாயம் வேண்டும். அது உள்ளது அப்படியிருக்க ஏனைய இதரபொருட்களுக்கும் பாஸ் அதாவது அத்தாங்கு-மண்டாக்கம்பி-(ஒருபாகம் ஒன்றரைப்பாகம்)வலைகள் அணிகின்ற ஜக்கட் ரோஜ்லைட் சட்லைட் அட்டைக்கண்ணாடி காலில்போடும் சப்பாத்து சிலின்டர் இன்னும் பலவகையான பொருட்களுக்கும் பாஸ் எடுக்கவேண்டும் என்று செல்வதில் என்னஞாயம் இருக்கின்றது….
ஓவ்வொரு கடற்ரொழிலாலியும் கடலுக்குள் போகும் போது அவன் எவ்வளவு கஸ்ரப்பட்டு மீனினை பிடித்து கரைகொண்டு வரபடும் சிரமம் அவர்களுக்குத்தான் தெரியும்.
சும்மா கையால் மீன்களை அள்ளிக்கொண்டு வருவதில்லை காற்றிலும் குளிரிலும் தன்னை உருக்கியே தொழிலில் ஈடுபடுகின்றான் அவனுக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டிய கடற்படை அவர்களைளே பிரச்சினைக்கு தள்ளுகின்றது.
ஒரு வோட்டில் 3பேருக்கு மேல் செல்லக்கூடாது என்றால் அதாவது குறைந்தது ஒரு வோட்டில் 06தொடக்கம் 10 மீனவர்கள் தொழிலுக்கு செல்கின்றார்கள் 03 மீனவர்கள் தான் செல்ல முடியும் என்றால் மிகுதி 07 மீனவர்களின் நிலை என்ன…இவ்வாறு ஒரு நாள் அன்னளவாக 50 படகு தொழிலுக்கு போகின்றது 50*10-500 மீனவர்கள் தொழிலுக்கு செல்கின்றனர் இதே 03 மீனவர்கள் என்றால் 150 மீனவர்கள் தான் செல்லமுடியும் மிகுதி 350மீனவர்களும் தொழிலுக்கு செல்லாவிட்டால் அவர்கள்pன் குடும்பம் பொருளாதாரத்தினை யார் பொறுப்பேற்பது…
சும்மா ஒருசிலரின் வசதிக்காயும் தேவையில்லாத காரணங்களை காட்டி கொண்டு வரும் சட்டங்கள் பாஸ் நடைமுறைகள் ஏழை எளியவர்களின் மேல்தான் வேகமாய் பாய்கின்றது ஏன் இப்படி……
முதல் தேசிய அடையாள அட்டையை காட்டிவிட்டு கடலுக்கு சென்றார்கள் பின்பு புலிகளை காரணம் காட்டி பாஸ் நடைமுறை இருந்தது அதுவும் சரி இப்போதுதான் எந்தப்பிரச்சினையும் இல்லையே பிறகு ஏன் பாஸ்நடைமுறை…..
அது இருக்கட்டும் இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை ஒருபக்கம் இருக்கட்டும் எங்கள் பக்கங்களில் கரையோரத்தில் மீன்பிடிக்கும் சீசன் ரைமுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து படையெடுக்கும் தென்பகுதி மீனவர்களுக்கு ராஜமரியாதையோடு எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கும் திணைக்களம் கடற்படையதிகாரிகள் எங்கள் சம்மாட்டிமார்களில் சிலர் அவர்களிடம் எந்த பாஸ் நடைமுறையினையும் கேட்பதும் இல்லை எதிர்பார்ப்பதும் இல்லை அவர்கள் சிலின்டர் டைனமோட் அதிகளவான மீனவர்கள் ஒரு வோட்டில் மீன்பிடிக்கச்செல்லலாம் தப்பில்லை நாங்கள் செய்தால் தான் தப்பாய் படுகின்றது.
ஏன் இந்த இனப்பாகுபாடு எல்லாருமே மீனவர்கள் தான் நடுக்கடலில் ஒரு பிரச்சினை என்றால் தமிழ் சிங்களம் என்று மீனவர்களாகிய நாங்கள் பார்ப்பதில்லை ஆனால் அரசியல் வாதிகள் சில அதிகாரிகள் சில சம்மாட்டிமார்கள் தங்களின் சுயலாபத்திற்காகவும் சுயநலனுக்காகவும் மீனவர்களை பயன்படத்துகின்றார்கள் இதை மீனவர்கள் புரிந்து கொள்வதும் இல்லை….தெளிவும் இல்லை….
இன்றைய ஆர்ப்பாட்டமும் அப்படித்தான் சிலின்டர் கொண்டு அட்டைபிடிக்கும் வோட்டிற்கு மட்டுமே 3மீனவர்கள் செல்லலாம் என்ற அனுமதிக்கடிதத்தினை வைத்துக்கொண்டு தான் ஒட்டுமொத்த மீனவர்களையும் நிறுத்தியுள்ளனர்.
அதிலும் பெரிய சம்மாட்டிமார்களின் சில வோட்டுக்கள் மடக்கப்பட்டதால் தான் ஆர்ப்பாடடம் ஆரம்பமானது இல்லையெனில் எதுவுமே நடந்திருக்காது. பெரிய சம்மாட்டிமார்களுக்கும் பெரிய அதிகாரிகளுக்கும் நல்ல தொடர்பு உள்ளது அவர்களே திட்டம் தீட்டி இப்படியான ஆர்ப்பாட்டங்களை ஆரம்பிப்பார்கள் ஆர்ப்பாட்டம் தொடங்கும் போது முன்னிற்பவர்கள் பெரிய பெரிய அதிகாரிகள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்ததும் பின்னுக்கு சென்று மறைந்து விடுவார்கள்.
சம்மாட்டி மார்களினால் தூண்டப்பட்டும் தமது தொழிலை தடுக்கும் யாராக இருந்தாலும் அவர்களை எதிர்க்க துடிப்புடன் களத்தில் இறங்கும் இளைஞர்கள் பாடு பெரும்பாடாகி விடுகின்றது நமது இளைஞர்கள் கோபத்துடனும் ஆவேசத்துடனும் கோஷங்களை எழுப்பி எதிர்ப்பினை வெளியிடும் போது தூண்டிவிட்ட சம்மாட்டிமார்களே அறியாமல் இனங்காட்டிவிடுகின்றார்கள் இளைஞர்களை பிறகு என்ன அந்த இளைஞர்களின் வாழ்வு கேள்விக்குறியாகின்றது இதை இன்னும் உணராமல் பல இளைஞர்கள் களத்தில்……
ஒற்றுமை என்பது வீட்டிலும் இல்லை நாட்டிலும் இல்லை அட கடுகளவேனும் இல்லை பின்பு இப்படித்தான் தெருவில் நிற்க வேண்டும் எல்லாத்திற்கும்….காட்டிக்கொடுப்பதும் கூட்டிக்கொடுப்பதும் ஒற்றுமையாக நடக்கின்றது….
இந்த கடற்படையினரின் தொழிலை தடைசெய்தது கடந்த தினங்களுக்கு முன்பு முத்தரிப்புதுறையில் நடந்த சம்பவத்தினை நினைவுக்கு கொண்டு வருகின்றது. எங்களை சீண்டினால் நீங்கள் எப்போதுமே நிம்மதியாக வாழ முடியாது என்று சொல்வது போலவே உள்ளது….
எல்லாவற்றிற்கும் ஆர்ப்பாட்டமும் கர்த்தாலும் தான் தீர்வு நல்லதல்ல காலையில் சம்பவஇடத்திற்கு விரைந்தவர்களில் மீனவர்களின் பிரச்சினைக்கு முக்கியமான தீர்வினை முன்வைக்ககூடிய மீன்பிடி அமைச்சர் வரவில்லை ஆச்சரியமாக இருந்தது என்ன நடக்கின்றது.
மன்னார் மாவட்டத்தில். வெறுமனே மேடைகளில் ஏறி சமாதானம் சமத்துவம் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை என்று வாய்கிழிய பேசுவதைவிட்டு எதற்காக மக்கள் உங்களை தெரிவு செய்தார்களோ....! அவர்களின் நம்பிக்கையினை கெடுக்காமல் துரோகம் செய்யாமல் செயலில் இறங்குங்கள் பணம் சேர்ப்பதில் குறியாய் இருப்பதை விட்டு நல் மனத்துடன் தூய்மையாக சேவையாற்றுங்கள்….
இப்படியான சம்பவங்கள் தொடருமானால்…..
சும்மா இருக்கின்ற இளைஞர்களை சுறண்டிவிட்டு பின்……….
-மன்னார் விழி-
மன்னாரில் காலையில் நடந்தது என்ன….???.மன்னார் மீனவர்களே…முழுமையான படங்கள் இணைப்பு…
Reviewed by Author
on
November 04, 2016
Rating:

No comments:
Post a Comment