பயங்கரமான இயந்திர மனிதனை உருவாக்கிய ரஷ்யா....
உலகில் மிகவும் பயங்கரமான இயந்திர மனிதனை ரஷ்யா தயாரித்துள்ளது.
இயந்திர படை வீரன் என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. 4 மைல் தொலைவில் இருக்கும் எதிரியை அடையாளம் கண்டு கொலை செய்யும் திறன் இருப்பது இந்த இயந்திர மனிதனின் சிறப்பம்சமாகும்.
இதனடிப்படையில், இந்த இயந்திர மனிதனுக்கு 4 மைல் தொலைவில் இருக்கும் எதிரியை அடையாளம் கண்டு 100 வீதம் குறி தவறாது சுட்டுக்கொல்ல முடியும் என கூறப்படுகிறது.
அதேபோல் 400 மீற்றர் தொலைவில் இருக்கும் இலக்கு நோக்கி கைக்குண்டை எறிய முடியும்.
மேலும் வானில் பறந்து வரும் எதிரிகள் மற்றும் ட்ரோன் விமானங்களையும் சுட்டு வீழ்த்தக் கூடியளவில் இந்த இயந்திர மனிதனை ரஷ்ய விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.
எது எப்படி இருந்த போதிலும் இது மனித இனத்திற்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் உருவாக்கம் என சில விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மனிதர்கள் கண்டவுடன் இந்த இயந்திர மனிதனால் தாக்க முடியும் என்பதே இதற்கு காரணம் என அவர்கள் கூறியுள்ளனர்.
இதன் எல்லை எங்கு சென்று முடியுமோ என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பயங்கரமான இயந்திர மனிதனை உருவாக்கிய ரஷ்யா....
Reviewed by Author
on
November 15, 2016
Rating:

No comments:
Post a Comment