சிக்சர் மன்னன் கிறிஸ் கெய்ல் சாதனையை ஊதித்தள்ளிய வங்கதேச வீரர்
வங்கதேச பிரிமியர் லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்துள்ளார் வங்கதேச வீரர் சபீர் ரஹ்மான்.
வங்கதேச பிரிமியர் லீக் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பரிசல் புல்ஸ்- ராஜ்ஷாகி கிங்ஸ் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் ராஜ்ஷாகி கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர் சபீர் ரஹ்மான் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவர் 61 பந்தில் 9 பவுண்டரி, 9 சிக்சர்கள் என மொத்தம் 122 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்லின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
முன்னதாக கிறிஸ் கெய்ல் வங்கதேச பிரிமியர் லீக் போட்டியில் 112 ஓட்டங்கள் எடுத்ததே தனிநபரின் அதிகபட்ச ஓட்டங்களாக இருந்தது. இதனை தற்போது சபீர் முறியடித்துவிட்டார்.
இருப்பினும் ராஜ்ஷாகி கிங்ஸ் அணியால் பரிசல் புல்ஸ் அணியின் 194 ஓட்டங்கள் இலக்கை எட்ட முடியவில்லை.
ராஜ்ஷாகி கிங்ஸ் அணியால் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 188 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. வெற்றியின் விளிம்பு வரை வந்த அந்த அணி 4 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
சிக்சர் மன்னன் கிறிஸ் கெய்ல் சாதனையை ஊதித்தள்ளிய வங்கதேச வீரர்
Reviewed by Author
on
November 15, 2016
Rating:
Reviewed by Author
on
November 15, 2016
Rating:


No comments:
Post a Comment