அண்மைய செய்திகள்

recent
-

தடைகளை கடந்து சாதனை படைத்த புலம்பெயர் ஈழத்து பெண் விமானி வெளிப்படுத்திய மகிழ்ச்சி...


டென்மார்க் நாட்டின் முதலாவது தமிழ்ப் பெண் துணை விமானியான இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான அர்ச்சனா செல்லத்துரை பயணிகளுடனான முதல் பயணம் குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் தனது பேஸ் புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கனவு மெய்ப்பட்டது.

முதன்மை அதிகாரி எனும் பதிவியுடன் முதல் நாளில் பயணிகளுடன் முதல் பணி. நமது லட்சியத்தை நாம் அடையும்போது கிட்டும் மகிழ்ச்சிக்கு மாற்றே கிடையாது.

பயங்கள் எப்போதும் கடுமையாகவே இருந்தது. இந்த எல்லையை தொடுவதற்கு எனது வாழ்க்கையில் பலவற்றை நான் இழந்திருக்கிறேன்.

நண்பர்கள் விட்டகன்றனர், ஆண்டுகள் பல மறைந்தன, குடும்பத்துடன் செலவிட்ட காலங்கள் மறைந்தன, இளமையும் மறைந்துள்ளது.

பல முறை நனையும் கண்களை நானே துடைத்துக்கொள்ள நேர்ந்தது. இருப்பினும் நான் மகிழ்கிறேன், இதுபோன்று எனது வாழ்க்கையில் எப்போதும் நான் மகிழ்ச்சியாக இருந்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.



தடைகளை கடந்து சாதனை படைத்த புலம்பெயர் ஈழத்து பெண் விமானி வெளிப்படுத்திய மகிழ்ச்சி... Reviewed by Author on November 17, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.