அண்மைய செய்திகள்

recent
-

யாழ்.பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு - பேச்சுவார்த்தையில் கூட்டமைப்பு நிராகரிப்பு....


யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணைத்து ஜனாதிபதியுடன் சந்திப்பை நடாத்த இணக்கம் தெரிவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இதனை கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் தமிழ் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் மாத்திரமே கலந்துகொண்டிருந்த நிலையில், வேறு எவரும் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில், ஏன் ஏனைய தமிழர் தரப்பு இந்த பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படவில்லை என வினவிய போது கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு இவ்வாறு கூறியுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பின் போது மாணவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புறக்கணித்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை, இந்த கலந்துரையாடலுக்கான அழைப்பு தமக்கு விடுக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைபின் ஊடகப்பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு - பேச்சுவார்த்தையில் கூட்டமைப்பு நிராகரிப்பு.... Reviewed by Author on November 02, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.