சாள்ஸ் எம்.பியின் முயற்சியால் 400 மில்லியன் ரூபா நிதியில் மன்னார் மாவாட்டத்திற்கு உயர் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம்.-Photos
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் மன்னார் மாவட்ட கல்வி வளர்ச்சிக்காக கடந்த செப்டம்பர் மாதம் 22 ம் திகதி பாராளுமன்ற ஒன்று கூடலின் போது உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சிடம் மன்னார் மாவட்டத்தின் இளைஞர் யுவதிகளின் கல்வி வளர்ச்சிக்காக பல் கலைக்கழக வளாகம் ஒன்றினை நிர்மானிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
அதன் அடிப்படையில் மன்னார் மாவட்டத்திற்கு இலங்கை உயர் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம் ( ATI - Advanced Technological Institute ) ஒன்றினை நிர்மானிப்பதற்கு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சு அனுமதி வழங்கியதோடு 400 மில்லியன் ரூபாய் நிதியும் ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. மன்னார் உயிலங்குள பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தலமையில் பிரதேச செயலக அலுவலகர்கள் மற்றும் நில அளவை திணைக்கள அதிகாரிகளுடன் இன்று (03.11.2016) உயர் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம் அமைப்பதற்கு 5 ஏக்கர் நிலப்பரப்பு மேற்பார்வையிடப்பட்டு தீர்மானிக்கப்பட்டுளது.
மன்னார் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள இலங்கை உயர் தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்தில் HND in the field of Agriculture, English, Management, Accountancy, Information Technology, Engineering, Business Studies, Food Technology, Tourism and Hospitality Management etc, போன்ற கல்வி செயற்கைகள் இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக க.பொ. உயர் தர சித்தி பெற்று பல்கலை கழகம் செல்ல முடியாதுள்ள மன்னார் மாவட்ட இளைஞர் யுவதிகளின் உயர் கல்வி வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
சாள்ஸ் எம்.பியின் முயற்சியால் 400 மில்லியன் ரூபா நிதியில் மன்னார் மாவாட்டத்திற்கு உயர் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம்.-Photos
Reviewed by NEWMANNAR
on
November 03, 2016
Rating:

No comments:
Post a Comment