மன்னாரில் உதயமானது தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைப்பு……படங்கள் இணைப்பு
மன்னார் மாவட்டத்தின் பொருளாதாரப்பிரச்சினையால் கல்வி பாதிக்கப்படும் மாணவர்களின் கல்வித்தேவையினை பூர்த்தி செய்கின்ற அமைப்புக்கள் வரிசையில் புதிய வரவாக இன்று உதயமாகியுள்ளது தமிழமுது நண்பர்கள் வட்டம்…..
31-10-2016 திங்கள் காலை மன்-புனித பற்றிமா ம.ம.வித்தியாலயத்தின் காலை ஒன்று கூடல் நிகழ்வில் கல்லூரி முதல்வர் அருட்சகோதரர் S.J.ஸ்ரனிஸ்லோஸ் அவர்களின் தலமையில் உத்தியோகபூர்வமாக தமிழமுது நண்பர்கள் வட்டம் எனும் அமைப்பு ஆரம்பித்துவைக்கப்பட்டது.
நிகழ்வின் ஆரம்பமாக மங்களவிளக்கினை கல்லூரி அதிபர் அருட்சகோதரர் S.J.ஸ்ரனிஸ்லோஸ் அவர்கள் ஏற்றிவைக்க அதனைத்தொடர்ந்து பிரதிஅதிபர்கள் அருட்பணியாளர் வின்சன் அடிகளார் திரு.A.ரெமியாஸ் சிராய்வா ஆசிரியர்கள் சார்பில் திருமதி.B.J.J. குலாஸ் மாணவமாணவிகள் சார்பில் மூவரும் அமைப்பின் இயக்குநர் வை.கஜேந்திரன் செயலாளர் K.சுபாகரன் பொருலாளர் B.இந்திரக்குமார் ஆகியோரும் மங்களவிளக்கினை ஏற்றிவைத்ததைத்தொடர்ந்து.
அமைப்பு உருவாக்கம் அதன் செயற்பாடு இலக்கு என்பன பற்றி இயக்குநர் வை.கஜேந்திரன் தனது கருத்துப்பகிர்வில் எமது பிறப்பே ஏதோ ஒரு சிறப்பான செயலுக்காகத்தான் அதையுணர்ந்து எமது பிறந்த நாளுக்கு நாம் செலவு செய்கின்ற பணத்தில் இருந்து சிறிய அளவு பணத்தினை அன்றாடத்தேவைகளை அதிலும் கல்வி கற்றலுக்கு தடையாக இருக்கின்ற பொருளாதாரத்தினை மாணவமாணவிகளுக்கான கற்றல் கற்பித்தல் உபகரணங்களை வாங்கிகொடுப்பதற்கு கொடுப்போமானால் அது அவர்களின் கல்விச்செயற்பாட்டிற்கு பெரும் உதவியாக இருக்கும்.
நோக்கு-முயற்சி செய் சின்ன முயற்சிதான் பெரிய எழுச்சியாகும்
இலக்கு .........
இருப்பதை பகிர்ந்து கொள்வோம்
இல்லை என்பது இல்லாமல் போகும்
இவ்வுலகில் -அதற்கு
இணைவோம் நாம்
தூரநோக்கு சிந்தனையோடு தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைப்பானது இன்னும் தனது பணியினை இடைவிடாது தொடரும் நல்லதொரு ஆரம்பம் வெற்றிச்சிகரம் தொடும். உரையைத் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட 11 மாணவமாணவிகளுக்கு K.சுபாகரன் அவர்கள் தனது பிறந்த நாள் செலவில் இருந்து ஒதுக்கிய நிதியில் இருந்தே கற்றல் உபகரணப்பொதியினை வழங்கிவைத்தார்…..
தலைமையுரையில் கல்லூரி முதல்வர் S.J.ஸ்ரனிஸ்லோஸ் தற்போதைய சூழ்நிலையில் இளைஞர்கள் பல்வேறான சிந்தனைகளோடு அதாவது தனக்கானதேவை படிப்பு பட்டம் பதவி நிறைவேற்றிக்கொள்ள எத்தனிக்கின்றார்களே தவிர தங்களோடு ஒன்றாக வாழுகின்ற அயலவரை நண்பர்களை எண்ணிப்பார்பதில்லை அந்த வகையில் இந்த வயசிலும் அயலவரின் தேவைகளை குறிப்பாக மாணவமாணவிகளின் கல்விச்செயற்பாட்டிற்கு தங்களால் இயன்றளவுக்கு அதுவும் அமைப்பொன்றை உருவாக்கி செயற்பட முனைந்திருக்கும் தமிழமுது நண்பர்கள் வட்டம் அபைபினருக்கு வாழ்த்துக்கள் கூறுகின்றேன்.
பாராட்டுகின்றேன்.
இந்த அமைப்பினை எமது பாடசாலையில் காலை வேளையில் ஆரம்பித்து வைக்க அனுமதியளித்தற்கு காரணம்.
கல்விச்செயற்பாடு என்பதோடு மாணவர்கள் மத்தியில் படிக்கின்றவயதிலே இவ்வாறான நல்லபழக்கங்களை பிறருக்கு உதவுதல் கொடுத்து வாழ்தல் என்பதை மாணவப்பராயத்திலே பழகவேண்டும் என்பதற்காகவும் நல்லவிடையங்களை ஊக்குவிக்கவேண்டும் என்பதற்காகவும் தான். தற்போதைய இளைஞர்யுவதிகளுக்கு புத்திமதி சொல்லத்தேவையில்லை நல்லவழிகாட்டலும் அதற்கான ஆலோசனையும் போதும் நாங்கள் யாராக இருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் பிறருக்காகவேதான் வாழ்கின்றோம்.
இதுதான் எமது படைப்பின் சாரம்சம் அதையுணர்ந்தவர்களாக இந்த அமைப்பினர் செயற்பட முதற்படியினை எமது பாடசாலையில் இருந்து ஆரம்பிப்பது எமது கல்லூரிக்கு இன்றைய நாள் ஆசிர்வதிக்கப்பட்ட நாளாகும் வாழ்த்துக்கள்
தமிழமுது நண்பர்கள் வட்டம் அபைபினருக்கு….
தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைப்பு சார்பாக நிகழ்ச்சித்தொகுப்பினையும் நன்றியுரையினையும் J.நயன் அவர்கள் கருத்துப்பகிர்வில் எமது அமைப்பினை இப்படியானதொரு காலைப்பெழுதில் மாணவர்கள் மத்தியில் ஆரம்பித்து வைப்பதற்கு அனுமதிதந்து ஊக்கமளித்த கல்லூரி முதல்வருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவமாணவிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கின்றோம் எமது சேவை தொடரும் என்றார்.


மன்னாரில் உதயமானது தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைப்பு……படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
November 01, 2016
Rating:
Reviewed by Author
on
November 01, 2016
Rating:




















No comments:
Post a Comment