அண்மைய செய்திகள்

recent
-

முசலிப் பிரதேச மீனவர்களின் பிரச்சினைக்கு மஸ்தான் எம்.பியால் தீர்வு

மன்னார் முசலி பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே. காதர் மஸ்தான் தெரிவித்தார்.

இன்று (16.11.2016) பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் தலைமையிலான குழுவினர் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீரவை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த வாரம் குறித்த விடயயம் தொடர்பாக அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்தாகவும், அதற்கான தீர்வினை அவர் இன்று வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார். குறித்த விடையம் தொடர்பில் இன்று விவரிவாக ஆராயப்பட்டதுடன் முசலி மீனவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சிலாவத்துறையில் பதிவு செய்யப்பட்ட மீனவர்கள் மட்டும் அங்கு முன்னரைப்போன்று தற்காலிக மீன்பிடி தொழிலில் ஈடுபடவும், காயக்குளி பகுதியில் 1990ம் ஆண்டிற்கு முன்னர் இருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபடும் கொண்டச்சி பகுதி மீனவர்கள் மாத்திரம் மீனவத்தொழிலில் ஈடுபட முடியுமெனவும் அமைச்சரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விடையத்தை உரியவர்களின் கவனத்துக்கு கொண்டுவந்த மஸ்தான் எம்பிக்கு முசலி பிரதேச மீனவர் சங்கங்களின் சமாச பிரதிநிதிகள் நன்றியை தெரிவித்தனர்.

இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான், அமைச்சர் ரவூப் ஹக்கீம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹு னைஸ் பாரூக் மீனவ சங்கங்களின் சமாச பிரதிநிதிகள், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
முசலிப் பிரதேச மீனவர்களின் பிரச்சினைக்கு மஸ்தான் எம்.பியால் தீர்வு Reviewed by NEWMANNAR on November 17, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.