மர்மமான முறையில் மரணித்த முன்னாள் போராளியின் குடும்பத்துக்கு உதவ மஸ்தான் எம்.பி ஏற்பாடு
மர்மமான முறையில் அண்மையில் மரணித்த வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் போராளியான தே.கமலதாசின் குடும்பத்தினரை சந்தித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான கே.கே.மஸ்தான், அவர்களின் வாழ்வாதார உதவிகள் தொடர்பாக பிரதேச செயலாளருடன் கலந்துரையாடுவதாக தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வின்போது விஷ ஊசி ஏற்றப்பட்டதாலேயே குறித்த போராளி உயிரிழந்தாக குடும்பத்தார் ஏற்கனவே சந்தேகம் வெளியிட்டிருந்த நிலையில், அதுகுறித்தும் குடும்பத்தாரிடம் மஸ்தான் எம்.பி. கேட்டறிந்தார்.
இதன்போது சமுர்த்தி முத்திரை வழங்கப்படாமை, வாழ்வாதார உதவிகள் கிடைக்காமை, நீர்த்தேவைக்காக வெட்டப்பட்ட கிணற்றை கட்டி முடிக்க முடியாமையினால் அது தூர்ந்துபோனமை மற்றும் உயிரிழந்த போராளியின் பிள்ளைகளது கல்வி நிலை தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் குடும்பத்தார் முறையிட்டனர்.
இவற்றை செவிமடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான், குறித்த பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதாக தெரிவித்ததோடு, அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதியொன்றையும் குடும்பத்தாருக்கு வழங்கிவைத்தார்.
புனர்வாழ்வின்போது விஷ ஊசி ஏற்றப்பட்டதாலேயே குறித்த போராளி உயிரிழந்தாக குடும்பத்தார் ஏற்கனவே சந்தேகம் வெளியிட்டிருந்த நிலையில், அதுகுறித்தும் குடும்பத்தாரிடம் மஸ்தான் எம்.பி. கேட்டறிந்தார்.
இதன்போது சமுர்த்தி முத்திரை வழங்கப்படாமை, வாழ்வாதார உதவிகள் கிடைக்காமை, நீர்த்தேவைக்காக வெட்டப்பட்ட கிணற்றை கட்டி முடிக்க முடியாமையினால் அது தூர்ந்துபோனமை மற்றும் உயிரிழந்த போராளியின் பிள்ளைகளது கல்வி நிலை தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் குடும்பத்தார் முறையிட்டனர்.
இவற்றை செவிமடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான், குறித்த பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதாக தெரிவித்ததோடு, அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதியொன்றையும் குடும்பத்தாருக்கு வழங்கிவைத்தார்.
மர்மமான முறையில் மரணித்த முன்னாள் போராளியின் குடும்பத்துக்கு உதவ மஸ்தான் எம்.பி ஏற்பாடு
Reviewed by NEWMANNAR
on
November 17, 2016
Rating:
No comments:
Post a Comment