மட்டு விகாராதிபதியின் செயலைக்கண்டித்து வெடிக்கும் போராட்டங்கள்
மட்டக்களப்பு, பட்டிப்பளைப் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அரச அதிகாரிகளுக்கு மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதியினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையைக் கண்டித்து இன்று கிரான் தெற்கு பிரதேச செயலக அனைத்து உத்தியோகத்தர்களும் அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரச உத்தியோகஸ்தர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தரவேண்டும், பட்டிப்பளையில் நடைபெற்ற அடாவடி எப்போது முடியும்..?
கடந்த காலங்களில் அரச உத்தியோகஸ்தர்களுக்கு அச்சுறுத்தல் தொடர் கதையாகியுள்ளது, விரைவில் நல்லாட்சி அரசு நல்தொரு முடிவெடுக்க வேண்டும், போன்ற பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் குறித்த விகாராதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், கடந்த காலங்களில் கிரான் தெற்கு பிரதேச செயலக அரச அதிகாரிகள் பாதுகாப்பு படையினரினால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர், இதுபோன்ற அடாவடி செயற்பாட்டை உடன் நிறுத்த வேண்டும் போன்ற கோசங்களை எழுப்பியிருந்தனர்.
இதன் காரணமாக இன்றைய நாளுக்குரிய பிரதேச அலுவக சேவைகள் தடைப்பட்டிருந்ததுடன், பிரதேச செயலகத்திற்கு வருகைத்தந்த பொதுமக்கள் விகாராதிபதியின் குறித்த செயற்பாட்டை கண்டித்து அடையாள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகத்திலும் விகாராதிபதியின் செயற்பாட்டைக் கண்டித்து இன்று காலை முதல் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டு விகாராதிபதியின் செயலைக்கண்டித்து வெடிக்கும் போராட்டங்கள்
Reviewed by NEWMANNAR
on
November 17, 2016
Rating:

No comments:
Post a Comment