இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டினால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மன்னார் தாழ்வுபாட்டு கிராம மீனவர்கள்.(படங்கள் )
மீன் பிடிப்பதற்காக கடலில் பாய்ச்சப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைத்தொகுதிகளை இந்திய மீனவர்கள் நாசம் செய்துள்ளதோடு,அதிகலவான வலைத்தொகுதிகளை கலவாடிச் சென்றுள்ளமையினால் தாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதோடு,தமது வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளதாக மன்னார் தாழ்வுபாட்டு கிராம மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மன்னார் தாழ்வுபாட்டு கிராம மீனவர்கள் வழமை போன்று மீன் பிடிப்பதற்காக கடந்த 14 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு இலங்கை கடல் இல்லையில் கடலில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைத்தொகுதிகளை பாய்ச்சி விட்டு மீண்டும் கரை திரும்பியுள்ளனர்.
மீண்டும் மறுநாள் 15 ஆம் திகதி திங்கட்கிழமை காலை தாம் கடலில் பாய்ச்சிய வலைகளில் உள்ள மீன்களை பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற போது தாங்கள் பாய்ச்சிய இடத்தில் வலைகள் இல்லை எனவும் தொலைவில் சென்று பார்த்த போது இந்திய மீனவர்கள் தமது வலைகளை இந்திய மீனவர்களின் படகுகளில் ஏற்றிக்கொண்டிருந்தனர்.
நாங்கள் குறித்த வலைகள் தாழ்வுபாட்டு கிராம மீனவர்களான எங்களுடையது என உறுதிப்படுத்திய போதும் வலைகளை தரவில்லை.
சுமார் 15 படகுகளுக்கான வலைத்தொகுதிகளையே இந்திய மீனவர்கள் இவ்வாறு களவாடிச் சென்றுள்ளனர்.
இந்திய மீனவர்களினால் சுமார் 40 இலட்சத்திற்கும் அதிகமான வலைத்தொகுதிகள் கலவாடப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அவற்றில் ஒரு சில வலைத்தொகுதிகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக தாழ்வுபாட்டு கிராம மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
15 ஆம் திகதி தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் நீண்ட நேரமாக கரை திரும்பாத நிலையில் மீனவர்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டிருந்ததோடு,கடற்படையினரின் உதவியுடன் கடலுக்குச் சென்று மீட்கப்பட்ட வலைகளையும்,எரிபொருள் இன்றி காணப்பட்ட படகுகளையும் தாம் மீட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
-இந்த நிலையில் இன்று (17) வியாழக்கிழமை அதிகலவான தாழ்வுபாட்டு கிராம மீனவர்கள் தொழிலுக்குச் செல்லவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் இன்று வியாழக்கிழமை(17) காலை தாழ்வுபாட்டு கடற்கரைக்குச் சென்று மீனவர்களுடன் கலந்துரையாடினார்.
-இதன் போது கடந்த பல வருடங்களாக இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுவதாகவும்,நாம் இந்திய மீனவர்களினால் பாதீக்கப்படுவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தாம் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் மன்னார் பொலிஸ் நிலையம்,மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களம் போன்றவற்றில் தொடர்ந்தும் முறைப்பாடுகளை மேற்கொள்ளுகின்ற போதும் தமது பாதீப்பு குறித்து எவ்வித நடவடிக்கைகளையும் உரிய அதிகாரிகள் மேற்கொள்ளுவதில்லை என பாதீக்கப்பட்ட மீனவர்கள் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனிடம் தெரிவித்தள்ளனர்.
-படகுகளுக்கான காப்புறுதி உற்பட கடற்தொழில் திணைக்களம் நடை முறைப்படுத்தியுள்ள திட்டங்கள் சகலவற்றையும் தாம் செயல்படுத்தியுள்ள போதும் பாதீக்கப்படுகின்ற மீனவர்களுக்கான இழப்பீடுகளை உரிய முறையில் வழங்க மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களம் இது வரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வில்லை என மீனவர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 15 ஆம் திகதி முதல் இன்று வரை பாதிக்கப்பட்ட மீனவர்கள் தொழில் முயற்சிகள் இன்றி உள்ளதோடு,ஏனைய மீனவர்கள் கடலுக்குச் சென்று பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைத்தொகுதிகளை கடலில் பாய்ச்ச அச்சப்படுகின்றனர்.
எனவே பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய முறையில் ஈழப்பீடுகளை பெற்றுக்கொடுக்க மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களம் உரிய நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வேண்டும் எனவும்,இந்திய மீனவர்களின் கெடுபிடிகளை குறைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாதீக்கப்பட்ட தாழ்வுபாட்டு கிராம மீனவர்கள் உரிய தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் நிருபர்-
(17-11-2016)

Reviewed by NEWMANNAR
on
November 17, 2016
Rating:
No comments:
Post a Comment