2017 ஆம் ஆண்டிற்கான மன்னார் பட்டின மாட்டிறைச்சி விற்பனை நிலையத்திற்கான கேள்வித்தொகை அதிகரிப்பு -நுகர்வோர் பாதிப்படையும் நிலை .-Photos
மன்னார் நகர சபைக்குற்பட்ட பகுதிகளில் 2017 ஆம் ஆண்டிற்கான இறைச்சி விற்பனை நிலையங்களுக்கான கேள்வி பத்திர அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ள போதும்,2017 ஆம் ஆண்டுக்கான சபையின் கேள்வித்தொகை அதிகரித்துள்ளதாகவும்,இதன் காரணத்தினால் நுகர்வோர் பாதிப்படைவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்தள்ளதாக மன்னார் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
![]() |
Add caption |
2017 ஆம் ஆண்டிற்கான மன்னார் பட்டின மாட்டிறைச்சி விற்பனை நிலையத்திற்கான சபையின் குறைந்த கேள்வித்தொகையாக 15 இலட்சத்து 97 ஆயிரத்து 200 ரூபாய் எனவும்,பட்டின ஆட்டிறைச்சி விற்பனை நிலையத்திற்கு சபையின் குறைந்த கேள்வித்தொகையாக 3 இலட்சம் ரூபாவும், பள்ளிமுனை மாட்டிறைச்சி விற்பனை நிலையத்திற்கான சபையின் குறைந்த கேள்வித்தொகையாக 3 இலட்சத்து 44 ஆயிரத்து 850 ரூபாவும்,பெரியகமம் மாட்டிறைச்சி விற்பனை நிலையத்திற்கான சபையின் குறைந்த கேள்வித் தொகையாக 3 இலட்சத்து 13 ஆயிரத்து 500 ரூபாய் எனவும் மன்னார் நகர சபையினால் கேள்வித்தொகை கோரப்பட்டுள்ளது.
எனினும் மன்னார் பட்டின மாட்டிறைச்சி விற்பனை நிலையத்திற்கான சபையின் குறைந்த கேள்வித்தொகையாக 15 இலட்சத்து 97 ஆயிரத்து 200 ரூபாய் என மன்னார் நகர சபை அறிவித்துள்ளது.
இதன் காரணமாக மாட்டிறைச்சி நுகர்வோர் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என மன்னார் மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஒப்பந்த தொகை அதிகரித்துள்ளதன் காரணத்தினால் குறித்த ஒப்பந்தந்தை பெற்று மன்னார் பட்டின மாட்டிறைச்சி விற்பனை நிலையத்தினை நடத்துபவர்கள் மாட்டிறைச்சியை நிர்ணயிக்கப்பட்ட விலையினை விடவும் அதி கூடிய விலைக்கும் விற்பனை செய்யும் நிலை ஏற்படும் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களிலும் சரி தற்போதும் சரி மன்னார் பட்டின மாட்டிறைச்சி விற்பனை நிலையத்தில் மன்னார் நகர சபையினால் நிர்ணயிக்கப்பட்ட விலையினை மீறி அதிகூடிய விலைக்கு மாட்டிறைச்சி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
எனினும் மன்னார் நகர சபை குறித்த விலைக்கட்டுப்பாடு தொடர்பாக பல தடைவ அறிவித்தல்களை வழங்கிய போதும் கட்டுப்பாட்டு விலையை விட சற்று அதிகரித்த விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டிற்கான மன்னார் பட்டின மாட்டிறைச்சி விற்பனை நிலையத்திற்கான சபையின் குறைந்த கேள்வித்தொகையாக 15 இலட்சத்து 97 ஆயிரத்து 200 ரூபாய் கோரப்பட்டுள்ளமை மன்னார் மக்களை பாதிப்படைய செய்யும் நடவடிக்கையாக காணப்படுவதாகவும்,தமது இலாபத்திற்காக ஒப்பந்த தாரர் மக்களிடம் இருந்தே மேலதிக பணம் அறவிடும் நிலை எதிர்காலத்தில் ஏற்படும் என நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர்.
2017 ஆம் ஆண்டிற்கான மன்னார் பட்டின மாட்டிறைச்சி விற்பனை நிலையத்திற்கான கேள்வித்தொகை அதிகரிப்பு -நுகர்வோர் பாதிப்படையும் நிலை .-Photos
Reviewed by NEWMANNAR
on
November 16, 2016
Rating:

No comments:
Post a Comment