மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தின் முறைசாராக்கல்விப்பிரிவினரால் சிறப்புற நடைபெற்ற கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்.
16.11.2016 அன்று காலை 11.30 மணியளவில் மன்னார் வலயக்கல்வி அலுவலக முகாமைத்துவ மண்டபத்தில், மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி செலின் சுகந்தி செபஸ்ரியன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக மன்னார் தொழிநுட்பக் கல்லூரியின் அதிபர் திரு.கே. செந்தில்வேற்பிள்ளை அவர்களும் கௌரவ விருந்தினராக மன்னார் யேவைய வின் முகாமையாளர் திரு. எஸ். வீனஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனா.;
மன்னார் வலயக்கல்விப்பணிமனையின் உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. எம். ஆர். யோகாநந்தன் அவர்களின் கீழ் கணினி தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம், திரை அச்சுப்பதித்தல்கலை, மனைப்பொருளியல், தையல், பூவேலை, பன்னவேலை போன்ற பாடநெறிகளுக்கான போதனாசியர்களால் பயிற்சி அளிக்கப்பட்ட நூறு வரையான மாணவர்களுக்குச் சான்றிதழ்களும், போதனாசியர்களின் சேவையினைப் பாராட்டி அவர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது. இவ்;நிகழ்விற்கு இருநூறுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் உரையாற்றிய வலயக்கல்விப் பணிப்பாளர் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்கள் எதிர்காலத்தில் தமக்குரிய தொழில் துறைகளில் தன்னம்பிக்கையுடன் செயற்பட இப்பயிற்சி நெறிகள் வழிவகுக்கும் என குறிப்பிட்டார். துறைகள் சார்ந்த மாணவர்களினால் உருவாக்கப்பட்ட கலைப்படைப்புக்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.
மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தின் முறைசாராக்கல்விப்பிரிவினரால் சிறப்புற நடைபெற்ற கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்.
Reviewed by NEWMANNAR
on
November 17, 2016
Rating:

No comments:
Post a Comment