அண்மைய செய்திகள்

recent
-

வடக்கின் எழுச்சிக்கு நன்றி கூறும் புதிய சுற்றரிக்கை....


வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட புதிய அதிபர்களுக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நீதியான முடிவை வழங்கியுள்ளதாக வடமாகாண புதிய அதிபர்கள் சங்கம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு அதிபர்களின் நிலைப்படுத்தல் தொடர்பாக கௌரவ முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களின் தீர்மானம் நீதியானதாக அமைந்துள்ளது.

வடக்கு மாகாணம் மற்றைய மாகாணங்களை விட விசேடமாக பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் நீதியரசர் விக்னேஸ்வரன் வடக்கு மாகாணத்திற்கு முதலமைச்சராக இருப்பதும் காரணமாகும்.

தெரிவு செய்யப்பட்ட புதிய அதிபர்களை நிலைப்படுத்துவதில் ஏனைய மாகாணங்கள் வடக்கு மாகாணம் உட்பட மோசமான முடிவுகளை எடுத்திருந்தாலும், நீதியரசர் வடக்கு மாகாண முதலமைச்சர் வடக்கு அதிபர்களின் நியமனம் தொடர்பாக எடுத்த முடிவைப் பாராட்டுகின்றோம்.

அவரின் பணிப்புரைக்கமைவாக வட மாகாண கல்வியமைச்சின் செயலாளர் வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கு அனுப்பி வைத்த இறுதி சுற்றறிக்கை மிகவும் நீதியாக அமைந்துள்ளது.

இதேவேளை புதிய அதிபர்கள் தொடர்பாக அவர் எடுத்த தீர்மானமே மத்திய கல்வியமைச்சின் மத்திய தீர்மானமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

எனவே வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் எடுத்த தீர்மானத்தின் படி வடக்கு மாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 398 அதிபர்களுக்கும் பாடசாலைகள் வழங்கப்படுவதை நாம் ஆதரிக்கின்றோம்.

அதுவே நியாயமான தீர்வாக அமையும் என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். எனவே மற்ற மாகாணங்களுக்கு முன் உதாரணமாக வடக்கு மாகாணம் செயற்படும் என்று நம்பிக்கை கொள்கின்றோம்.

வடக்கு மாகாண கல்வி அபிவிருத்திக்கு புதிய அதிபர்களின் பங்கு மிக முக்கியமான ஒன்றாகும். எனவே வடக்கு மாகாண புதிய அதிபர்களின் பாடசாலை நிலைப்படுத்தல் தொடர்பாக வடக்கு மாகாண அதிபர்கள் சங்கம் உறுதியாக பணியாற்றும். இவ்வாறான விடயங்களை உள்ளடக்கியதாக குறித்த அறிக்கை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கின் எழுச்சிக்கு நன்றி கூறும் புதிய சுற்றரிக்கை.... Reviewed by Author on November 17, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.