அண்மைய செய்திகள்

recent
-

வட மாகாண கடலோர பகுதிகள் பாதுகாப்பு படையினரின் வசம் - ஆனந்தி சசிதரன்


இயற்கை அனர்த்தத்தாலும் இனப்பிரச்சினையாலும் நீண்ட வரலாறு கொண்ட சமூகமாகத் தான் எமது மீனவ, விவசாய சமூகம் இருக்கின்றது என வடமாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார் .

நீர்கொழும்பு மாநகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவு விழாவிலே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இன்று வரை மீனவர்களுடைய அடிப்படை பிரச்சினைகள் கூட தீர்க்கப்படாமல் உயிர் ஆபத்துகளுக்கும் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் மீனவர்களுடைய வாழ்வாதாரம் போய்க்கொண்டு இருக்கின்றது.

வடமாகாணத்தை பொறுத்தவரையில் 3இல் இரண்டு பங்கு கடலோர பகுதிகள் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.


எந்த ஒரு அரசும் ஆட்சிக்கு வந்தாலும் தீர்க்கப்பட வேண்டிய இந்த தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாமலே இழுத்தடிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றது.

உண்மையிலே இந்த தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கமானது மிகவும் பலம் வாய்ந்த ஒரு அமைப்பு இதன் மூலம் மீனவர்களுடைய பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என நம்புகின்றேன் என வடமாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வட மாகாண கடலோர பகுதிகள் பாதுகாப்பு படையினரின் வசம் - ஆனந்தி சசிதரன் Reviewed by Author on November 29, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.