சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு வவுனியா மாவட்ட சமுக சேவை திணைக்களத்தினால் வினாடி வினாப்போட்டி - 2016-Photos
தலைமுறைப்பாகுபாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்தல்' எனும்
தொனிப்பொருளில் சர்வதேச முதியோர் தினம் வவுனியா மாவட்ட சமூக சேவைகள்அலுவலகமும் மாவட்ட முதியோர் சங்கமும் இணைந்து எதிர்வரும் 10.11.2016 (வியாழக்கிழமை) வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற உள்ளது.
சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு வவுனியா மாவட்ட சமுக சேவை அலுவலகத்தினால் வினாடி வினாப் போட்டி ஒன்று நடைபெற்றது. இப்போட்டிகள் இரு பிரிவாக நடைபெற்றது. • முதியோருக்கான வினாடி வினாப் போட்டி
• பாடசாலை மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டி
முதியோருக்கான வினாடி வினாப் போட்டி 01.11.2016 (வியாழக்கிழமை) காலை 9.00 மணியளவிலிருந்து மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் நெடுங்கேணி பிரதேச முதியோர் சங்கம், நெளுக்குளம் முதியோர் சங்கம், பூந்தோட்டம் முதியோர் சங்கம், பண்டாரிக்குளம் முதியோர் சங்கம், ஓமந்தை முதியோர் சங்கம், வவுனியா நகர முதியோர் சங்கம் ,தவசிக்குளம் முதியோர் சங்கம், மகிழங்குளம் முதியோர் சங்கம், பூவரசங்குளம் முதியோர் சங்கம், பரணாட்டகல் முதியோர் சங்கம், மருக்காரம்பளை முதியோர் சங்கம், ஈச்சங்குளம் முதியோர் சங்கம், சமளங்குளம் முதியோர் சங்கம், மூன்று முறிப்பு முதியோர் சங்கம், ஆசிக்குளம் முதியோர் சங்கம்,
மகாறம்பைக்குளம் முதியோர் சங்கம், தாண்டிக்குளம் முதியோர் சங்கம் ஆகிய முதியோர் சங்கங்களில் இருந்து 100 முதியவர்கள் பங்குபற்றினார்கள்.
இப்போட்டியிலிருந்து கால் இறுதிப்போட்டிக்கு பூந்தோட்டம் முதியோர் சங்கம்நெளுக்குளம் முதியோர் சங்கம், நெடுங்கேணி முதியோர் சங்கம் ஓமந்தை முதியோர் சங்கம், பண்டாரிக்குளம் முதியோர் சங்கம் வவுனியா நகரம் முதியோர் சங்கம் மற்றும் தவசிக்குளம் முதியோர் சங்கம் மகிழங்குளம் முதியோர் சங்கம் ஆகிய முதியோர் சங்கங்கள் போட்டியிட்டு அரையிறுதிப் போட்டிக்கு நெளுக்குளம் முதியோர் சங்கம் நெடுங்கேணி முதியோர் சங்கம், பூந்தோட்டம் முதியோர் சங்கம் பண்டாரிக்குளம் முதியோர் சங்கங்கம் பங்குபற்றியிருந்ததுடன் இறுதிப்போட்டிக்கு பண்டாரிக்குளம் நெளுக்குளம் முதியோர் சங்கங்கள்; தெரிவானது.
பாடசாலை மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டி 02.11.2016 ம் திகதி (வெள்ளிக்கிழமை) வ/சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி, வஃவிபுலானந்தா கல்லூரி, வ/இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி, வ/தமிழ் மத்திய மகாவித்தியாலயம், வ/பாவற்குளம் கணேஸ்வரா வித்தியாலயம்,
வ/அல்ஹாமியா மகாவித்தியாலயம், வ/பூவரசங்குளம் மகாவித்தியாலயம், வஃகனகராயன்குளம் மகாவித்தியாலயம் ஆகிய ஒன்பது பாடசாலைகளும் வினாடி வினாப் போட்டியில் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் அரை இறுதிப்போட்டிக்கு வஃசைவப்பிரகாசா மகளிர் கல்லூரியும் வ/விபுலானந்தா கல்லூரியும் அதேபோல வஃஇறம்பைக்குளம் மகளிர் கல்லூரியும் வ/தமிழ் மகாவித்தியாலயமும், மற்றும் வ/இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியும் வ/சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியும் ஆகிய பாடசாலைகள் போட்டியிட்டு இறுதிப்போட்டிக்கு வ/விபுலானந்தா கல்லூரியும் வ/தமிழ் மகாவித்தியாலயமும் தெரிவாகியுள்ளது.
இறுதிப் போட்டிகள் நகர சபை கலாசார மண்டபத்தில் 10.11.2016 ம் திகதி அன்று இடம் பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு வவுனியா மாவட்ட சமுக சேவை திணைக்களத்தினால் வினாடி வினாப்போட்டி - 2016-Photos
Reviewed by NEWMANNAR
on
November 05, 2016
Rating:
No comments:
Post a Comment