பல்லாயிரக் கணக்கானவர்களின் கண்ணீரில் நனைந்தது கிளிநொச்சி கனகபுரம் துயிலும் இல்லம்-Video
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று மாவீரர் நாள் நிகழ்வுகள் பெருமளவு மாவீரர்களின் உறவுகள் மற்றும் பொது மக்கள் ஒன்று கூடி கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக அனுஸ்டித்தனர். கடந்த 2007 ஆம் ஆண்டு இறுதியாக கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் சிறப்பாக நடத்தப்பட்டது. அதன் பின்னர் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு படையினரின் கட்டுப்பாட்டிற்குள் இப்பிரதேசங்கள் காணப்பட்ட போது தமிழ் மக்களின் பிரதேசங்களில் உள்ள அனைத்து மாவீரர் துயிலுமில்லங்களிலும் காணப்பட்ட கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் படையினரால் இடித்து ஒதுக்கப்பட்டு துயிலுமில்லங்கள் இருந்த இடம்தெரியாது மாற்றப்பட்டிருந்தது.
அதன் பின்னர் துயிலுமில்லங்களில் படையினர் முகாம்கள் அமைத்து சில வருடங்கள் சில வருடங்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தற்போது படையினர் அங்கிருந்து வெளியேறிய நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு சென்ற மாவீரர்களின் உறவினர்கள், மற்றும் பொது மக்கள் ஆகியோர் பற்றைகளால் சூழப்பட்டு காணப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களை துப்பரவு செய்தனர்.

இன்று கார்த்திகை 27 இல் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்த உறவுகளுக்கு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி உணர்வுபூர்வமாக மாவீரர் நாள் நிகழ்வை அனுஸ்டித்தனர். மாலை 6.5 மணிக்கு மணியோசை எழுப்பட்டு பொதுச் சுடரேற்றப்பட்டது. கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் பொதுச் சுடரை பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் ஏற்றி வைக்க தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.அதனைத் தொடர்ந்து சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகள் எனும் மாவீரர் வணக்கப் பாடல் ஒலிபரப்பப்பட அப் பாடலில் வருகின்ற வரிகளான எங்கே எங்கே உங்களின் இருவிழி திறவுங்கள் எனும் வரிகள் ஒலிக்கும் போது கலந்து கொண்ட அனைவரதும் கண்களில் கண்ணீருடன் உணர்வு பூர்வமாக காட்சியளித்ததனைக் காணக் கூடியதாக இருந்தது
பல்லாயிரக் கணக்கானவர்களின் கண்ணீரில் நனைந்தது கிளிநொச்சி கனகபுரம் துயிலும் இல்லம்-Video
Reviewed by NEWMANNAR
on
November 27, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 27, 2016
Rating:
















No comments:
Post a Comment