9 வயது சிறுமி மாரடைப்பால் மரணம்! பதற வைக்கும் பி்ன்னணி காரணம்....
துருக்கியில் 9 வயது சிறுமி மன அழுத்தம் காரணமாக மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Izmir மாகாணத்தை சேர்ந்த Y.K. என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகம் செய்த தாத்தாவிற்கு எதிராக இரண்டு நாட்களில் சிறுமி சாட்சியம் தர இருந்த நிலையில், இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக சிறுமி உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அண்மையில், சிறுமி தனது நண்பரின் 56 வயது தாத்தாவால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தை தொடர்ந்து சிறுமி உடனே பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். பின்னர், பொலிசாருக்கு தகவல் அளிக்க அவர்கள் குற்றவாளி தாத்தாவை கைது செய்துள்ளனர்.
பின்னர், தாத்தா பிணையில் வெளிவர நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்துள்ளது.
இந்நிலையில், நடந்த சம்பவத்தை நினைத்தும், நீதிமன்ற விசாரணையில் தாத்தாவிற்கு எதிராக ஆதாரம் கொடுக்க இருப்பதை நினைத்து நினைத்தும் குறித்த சிறுமி மன அழுத்தத்தில் வீட்டில் மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக சிறுமி தந்தை கூறியதாவது, குறித்த சம்பவத்தினால் என் குழந்தையே உயிரிழந்து விட்டாள். குற்றவாளி தண்டிக்கப்படுவதை பார்க்க நான் என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன் என தெரிவித்துள்ளார்.
9 வயது சிறுமி மாரடைப்பால் மரணம்! பதற வைக்கும் பி்ன்னணி காரணம்....
Reviewed by Author
on
December 01, 2016
Rating:

No comments:
Post a Comment