அண்மைய செய்திகள்

recent
-

உயரமான கட்டிடங்கள் பூமியின் சமநிலைக்கு பாதிப்பு!


உலகில் வளர்ச்சியடைந்த நகரங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய உயரமான கட்டிடங்கள் பூமியின் சமநிலைக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக இரகசியமான அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் சேன் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள மிகப் பெரிய கட்டிடங்கள் தொடர்பாக செய்மதி மூலம் மேற்கொண்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது.

2009ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட சேன் பிரான்சிஸ்கோ மில்லேனியம் டவர் ஒரு அடியும் நான்கு அங்குலமும் பூமிக்குள் இறங்கியுள்ளது.

மேலும் பல பெரிய கட்டிடங்கள் இவ்வாறு பூமிக்குள் இறங்கி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 350 மில்லியன் டொலர் செலவில் இந்த பாரிய ஆடம்பர கட்டிடம் கட்டப்பட்டது.

கட்டிடம் படிப்படியாக பூமிக்குள் இறங்கி வருவதாக டோர் மற்றும் செய்மதிப் படங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், ஆபத்தான கட்டிடங்களை வகைப்படுத்த ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

உயரமான கட்டிடங்கள் பூமியின் சமநிலைக்கு பாதிப்பு! Reviewed by Author on December 01, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.