அண்மைய செய்திகள்

recent
-

சாவக்கச்சேரியில் கோரவிபத்து மூன்று பெண்கள் உட்ப்பட பத்துபேர் மரணம் பலர் காயம்(photos)

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, சங்கத்தானை புகையிரத நிலையத்திற்கு முன்னால் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் சுற்றுலா பயணிகள் 10பேர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர்.

மாதம்பயில் இருந்து சுற்றுலாப் பயணிகளுடன் யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கயஸ் வாகனமும் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் இன்று பிற்ப்பகல் ஒன்று முப்பது மணியளவில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் சிக்கி கயஸ் வாகனத்தில் பயணித்த 3 பெண்களும் 7 ஆண்களும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாகவும், கயஸ் வாகனத்தில் பயணித்த ஏனைய மூன்றுபேர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இப்பொழுது யாழ் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் அத்துடன் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் பயணித்த பலர் காயமடைந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்

இதேவேளை உயிரிழந்த 10 பேரது சடலங்களும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளதாக ரெதரிவிக்கப்பட்டுள்ளது.

வேகமாக வந்த ஹயஸ் ரக வாகனத்தின் சில்லு காற்று போனதனால் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்து இடம்பெற்று உள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர்  முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








சாவக்கச்சேரியில் கோரவிபத்து மூன்று பெண்கள் உட்ப்பட பத்துபேர் மரணம் பலர் காயம்(photos) Reviewed by NEWMANNAR on December 17, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.