இந்தாண்டு இறந்த முக்கிய கிரிக்கெட் வீரர்கள் இவர்கள் தான்!
2016ஆம் ஆண்டில் கிரிக்கெட் விளையாட்டில் பல சாதனைகளை படைத்த சில ஜாம்பவான்களை கிரிக்கெட் உலகம் இழந்துள்ளது.
Martin Crowe (1962-2016)

நியூசிலாந்து அணியின் கேப்டனாக, வலது கை ஆட்டகாரராகவும் சிறப்பாக செயல்ப்பட்ட இவர் 1982லிருந்து 1995 வரை அந்த அணிக்காக 77 டெஸ்ட் போட்டிகளிலும், 143 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். கடந்த 2012ல் ஏற்ப்பட்ட நிண்நீர் சுரப்பு புற்றுநோயை வெல்ல முடியாமல் இந்த வருடம் மார்ச் 3ஆம் திகதி மார்டின் காலமானார்.
Tony Cozier (1940-2016)

கமண்டரியில் இவர் கம்பீர குரலுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. கடந்த 1965 ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் தனது கமண்டரி பயணத்தை தொடங்கிய இவர் பத்திரிக்கையாளராகவும் பணிபுரிந்துள்ளார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த மே மாதம் 11ஆம் திகதி இறந்தார்.
Hanif Mohammad (1934-2016)

வலது கை பாகிஸ்தான் அணி ஆட்டகாரரான ஹனீப், டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கியவர் ஆவார். பாகிஸ்தான் அணிக்காக 1952லிருந்து 1969வரையிலான காலகட்டத்தில் 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3915 ஓட்டங்கள் எடுத்துள்ள இவர் சுவாச கோளாறு பிரச்சனை காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி மரணமடைந்தார்.
Ken Higgs (1937-2016)
இடது கை பேட்ஸ்மேனாகவும், வலது கை வேகபந்து வீச்சாளராகவும் இங்கிலாந்து அணியில் சிறந்து விளங்கிய கென், 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 20.74 என்ற சிறந்த ஆவரேஜுடன் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முதல் தர போட்டியில் 511ல் கலந்து கொண்டு 1536 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இவர் வயது முதிர்வு காரணமாக கடந்த செப்டம்பர் 7ஆம் திகதி காலமானார்.
இந்தாண்டு இறந்த முக்கிய கிரிக்கெட் வீரர்கள் இவர்கள் தான்!
Reviewed by Author
on
December 26, 2016
Rating:

No comments:
Post a Comment