யாழின். முக்கிய பகுதிகளுக்கு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் திடீர் விஜயம்
யாழ். மாவட்டத்தில் உள்ள நெடுந்தீவு, எழுவதீவு மற்றும் அனலதீவு போன்ற பகுதிகளுக்கு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று(30) விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அங்கு சென்ற அவர் பாடசாலைகள், வைத்தியசாலைகள் என்பவற்றிற்கு சென்று அங்குள்ள குறை நிறைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.
மேலும் பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடத்திற்கு தேவையான கற்றல் உபகரணங்களையும் அவர் இதன் போது வழங்கி வைத்துள்ளார்.
குறிப்பாக நெடுந்தீவில் உள்ள 850 மாணவர்களுக்கு அவர் கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தீவகங்களில் உள்ள மந்தமான கல்வி நிலைகளை மாற்றுவதற்கு மாலை நேர வகுப்புக்களை அரசாங்க செலவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் அமைச்சர் கல்வித் திணைக்களத்தின் ஊடாக செய்து கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
யாழின். முக்கிய பகுதிகளுக்கு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் திடீர் விஜயம்
Reviewed by Author
on
December 01, 2016
Rating:

No comments:
Post a Comment