கிளிநொச்சியில் தேர்தல் பிரச்சாரம் தீவிரம்....
இளைஞர் சேவைகள் அமைச்சினால் வருடம் தோறும் நடாத்தப்படுகின்ற இளைஞர் பாராளுமன்றுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் கிளிநொச்சியில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ள இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் மாவட்டத்திற்கு ஒருவர் என்ற வகையில் 19 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இளைய சமூகத்தினுடைய தலைமைத்துவம், திறன் விருத்தி என்பவற்றை அபிவிருத்தி செய்யும் நோக்கில் வருடம் தோறும் இளையோர் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறுகின்றது.
இதனைத் தொடர்ந்து, கரைச்சி, கண்டாவளை, பூ நகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகங்களில் இருந்து 3876 வாக்களாளர்கள் தமது தேர்தல் பிரச்சார பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது போட்டியிடவுள்ள 19 வேட்பாளர்களில் மூன்று பெண் வேட்பாளர்களும் உள்ளடங்குகின்றனர்.
இலங்கையின் பாராளுமன்ற தேர்தலைப் போலவே இளைஞர் பாராளுமன்ற தேர்தலும் சூடு பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் தேர்தல் பிரச்சாரம் தீவிரம்....
Reviewed by Author
on
December 16, 2016
Rating:

No comments:
Post a Comment