எழுதுமட்டுவாழ் பகுதியில் எறிகணைகள் நேற்று மீட்பு
தென்மராட்சி எழுதுமட்டுவாழ் தெற்குப் பகுதியில் தோட்டக்காணி ஒன்றில் இருந்து நேற்று செவ் வாய்க்கிழமை மாலை 60 மில்லி மீற்றர் ரக எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி மேற்படி தோட்டக்காணியை விவசாயியொருவர் உழவு இயந்திரம் மூலம் பண்படுத்தியுள்ளார்.
அப்போது தகரம் ஒன்று தென்பட்டுள்ளது. அதனை மண்வெட்டியால் அகற்ற முற்பட்ட போது தகரத்தின் கீழ் பெட்டிகளில் எறிகணைகள் காணப்பட்டுள்ளன. இதனையடுத்து முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் இருந்த நிறுவனத்திற்கு விவசாயியால் தெரியப்படுத்தப்பட்டது.
அவர்கள் அப்பகுதியை பார்வையிட்டு அதற்குள் அதிக வெடிபொருள் இருக்கலாம் என்று தெரிவித்ததால் கிராம சேவகர் ஊடாக கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட் டது.
தொடர்ந்து இவ்விடயம் பொலி ஸாரால் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தப்பட்டதுடன் அப்பகுதியில் முன்னர் இராணுவ முகாம் அமைந்திருந்த காரணத்தினால் இராணுவத்துக்கும் குறித்த விடயம் அறி விக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை ஆயுதங்கள் இருந்த குழி தோண்டப்பட்டு அதற்குள் இருந்து 60 மில்லிமீற்றர் ரக எறிகணைகள் ஒரு தொகை மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட எறிகணைகள் நீதி மன்ற அனுமதி பெற்று விரைவில் அழிக்கப்படவுள்ளது.
2012ஆம் ஆண்டு வரை எழுது மட்டுவாழ் பகுதி இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலய மாககாணப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எழுதுமட்டுவாழ் பகுதியில் எறிகணைகள் நேற்று மீட்பு
Reviewed by NEWMANNAR
on
December 07, 2016
Rating:

No comments:
Post a Comment