மன்னாரில் பண்டிகைகால வியாபார நிலையம் அமைக்க இடம் ஒதுக்கீடு-மன்னார் நகர சபைக்கு 70 இலட்சம் ரூபாய் வருமானம்-நகர சபை செயலாளர்.
மன்னார் நகரசபையினால் பண்டிகைக்கால தற்காலிக வியாபாரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் மூலம் சுமார் 70 இலட்சம் ரூபாய் மன்னார் நகர சபைக்கு வருமானமாக கிடைத்துள்ளதாக மன்னார் நகரசபையின் செயலாளர் எல். றெனால்ட் பிறிற்றோ தெரிவித்தார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் நகரசபையினால் நத்தார்,புதுவருட பண்டிகைக்காலத்திற்காக தற்காலிக நடை பாதை வியாபாரத்தினை மேற்கொள்ள வழங்கப்படும் இடங்களுக்கான கேள்வி படிவங்கள் வழங்கப்பட்டு கேள்வி கோரல் மூலம் சித்தி பெற்ற கேள்விதாரர்களுக்கு இடங்கள் வழங்கப்பட்டுள்ளது.
பண்டிகைகால வியாபாரம் மேற்கொள்ள 1756 வர்த்தகர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.
குறித்த விண்ணப்பங்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.சுமார் 185 கடைகள் பகிரங்க ஏலம் மூலம் வழங்கப்பட்டது.
குறைந்த தொகையாக 13 ஆயிரம் ரூபாய் முதல் 67 ஆயிரத்து 800 ரூபாய் வரை கடைகள் ஏலத்தில் விடப்பட்டது.
இதன் மூலம் மன்னார் நகர சபைக்கு சுமார் 70 இலட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
பண்டிகைக்கால வியாபாரத்திற்காக வழங்கப்பட்ட 185 வியாபார நிலையங்களுக்கான இடங்களில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(18) முதல் வர்த்தக நிலையம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும்.
20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 31 ஆம் திகதி சனிக்கிழமை நள்ளிரவு வரை பண்டிகைக்கால வியாபாரங்கள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-குறித்த பண்டிகைக்கால வியாபாரம் மேற்கொள்ள வழங்கப்பட்ட இடங்களில் உணவகங்கள் நடத்த முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இனிப்புப்பண்டங்கள் விற்பனை செய்ய மன்னார் சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.
இம்முறை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள கடைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மன்னார் நகர சபை செயலாளர் கடந்த வருடம் பண்டிகைக்கால வியாபாரத்திற்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் மூலம் 49 இலட்சம் ரூபாய் மாத்திரமே மன்னார் நகர சபைக்கு வருமானமாக கிடைத்துள்ளது.
ஆனால் இம்முறை இடைத்தரகர்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக வர்த்தகர்கள் நேரடியாகவே விண்ணப்பித்து இடங்களை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் இதன் மூலமாகவே மன்னார் நகர சபைக்கு இம்முறை 70 இலட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தளள்தாகவும் நகர சபை பணியாளர்களின் பூரண ஒத்துழைப்பின் காரணமாகவே எவ்வித பிரச்சினைகளும் இன்றி பண்டிகைக்கால வியாபாரத்திற்கு இடங்கள் பகிர்தலிக்கப்பட்டுள்ளதாக மன்னார் நகரசபையின் செயலாளர் எல். றெனால்ட் பிறிற்றோ மேலும் தெரிவித்தார்.
மன்னாரில் பண்டிகைகால வியாபார நிலையம் அமைக்க இடம் ஒதுக்கீடு-மன்னார் நகர சபைக்கு 70 இலட்சம் ரூபாய் வருமானம்-நகர சபை செயலாளர்.
Reviewed by NEWMANNAR
on
December 16, 2016
Rating:

No comments:
Post a Comment