அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இது வரை 138 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்-மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட்(படம்)

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள பிரதேசங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும்,கடந்த ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் 138 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் 138 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளளர்.மேலும் கடந்த நான்கு மாத காலப்பகுதிக்குள் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 59 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இவர்களில் அதிகமான டெங்கு நோயாளர்கள் பேசாலை, தாழ்வுபாடு,சாவற்கட்டு போன்ற கிராமங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிறந்த முறையில் இவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு நல்ல நிலையில் வீடு திரும்பியுள்ளனர்.

-மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தொடர்ச்சியாக டெங்கு காய்ச்சல் தொடர்பாக மக்களுக்கு விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வேளைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.

ஆனால் நாங்கள் எதிர்பார்த்த பலன் கூடுதலாக கிடைக்கவில்லை.

இதற்கு காரணம் மக்களின் பூரண ஒத்துழைப்பு இன்மையே.மேலும் மக்களுக்கு டெங்கு நுளம்பின் உற்பத்தி மற்றும் நுளம்பு உற்பத்தியாகின்ற இடங்களை அடையாளம் கானுதல் போன்றவை தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் வகையில் கிராம மட்டத்தில் மக்கள் மத்தியில் விழிர்ப்புனர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

மிக குறுகிய காலத்தில் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நுளம்பின் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம்.அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள போதும் அபாயகரமான சம்பவங்கள் எவையும் நிகழவில்லை.

மேலும் எமது பிரிவில் டெங்கு நுளம்பு உற்பத்திக்கு காரணமாக தமது சூழலை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் பலருக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.என மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட் மேலும் தெரிவித்தார்.
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இது வரை 138 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்-மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட்(படம்) Reviewed by NEWMANNAR on December 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.