முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடம்: அப்பல்லோ மருத்துவமனை புதிய அறிக்கை
சென்னை:

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக
அப்பல்லோ மருத்துவமனை புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது. முதல்வருக்கு மருத்துவ நிபுணர்களால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அப்போலோ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. முதல்வருக்கு நேற்று மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. எக்மோ கருவி மூலம் முதல்வருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதல்வரின் உடல்நிலை மருத்துவ நிபுணர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிசிச்சை அளிக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தனர். எய்ம்ஸ் மருத்துவர்கள் கில்லானி, ராஜிவ் நரங், அஞ்சன் டிரிகா, தேவகவுரவ் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அவர்கள் முதல்வருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக
அப்பல்லோ மருத்துவமனை புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது. முதல்வருக்கு மருத்துவ நிபுணர்களால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அப்போலோ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. முதல்வருக்கு நேற்று மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. எக்மோ கருவி மூலம் முதல்வருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதல்வரின் உடல்நிலை மருத்துவ நிபுணர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடம்: அப்பல்லோ மருத்துவமனை புதிய அறிக்கை
Reviewed by NEWMANNAR
on
December 05, 2016
Rating:

No comments:
Post a Comment