அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஓலைத்தொடுவாய் கிராமத்தில் சட்ட விரோத மண் அகழ்வுக்கு எதிர்ப்பு-(Video&Photos)

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஓலைத்தொடுவாய் பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் காணியில் போலி ஆவணங்களை பயண்படுத்தி மண் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் நேற்று திங்கட்கிழமை (5) மாலை குறித்த காணியில் மண் அகழ்ந்து ஏற்றிக்கொண்டு சென்ற டிப்பர் வாகனத்தை கிராம மக்கள் இடை மறித்தமையினால் அக்கிராம மக்களுக்கும் டிப்பர் வாகனத்தின் சாரதிக்கும் இடையில் நீண்ட நேரம் வாக்கு வாதம் இடம் பெற்ற நிலையில் மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று டிப்பர் வாகனத்தின் சாரதியை அழைத்துச் சென்ற நிலையில் அக்கிராமத்தில் ஏற்பட்டிருந்த பதற்ற நிலை குறைவடைந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,,

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஓலைத்தொடுவாய் கிராமத்தில் ஆலயத்தில் இருந்து சுமாhர் 500 மீற்றர் தொலைவில் உள்ள தனியார் ஒருவரின் காணியில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக மண் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த மண் அகழ்வுக்கு காணியின் உரிமையாளர் அனுமதி வழங்கிய நிலையில் மன்னார் பிரதேச செயலகம் வழங்கிய அனுமதிப்பத்திரத்தை பயண்படுத்தி நீண்ட காலமாக மண் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

எனினும் குறித்த கிராமத்திற்கு பொறுப்பான கிராம அலுவலகரின் அனுமதி எவையும் வழங்கப்படாத நிலையில் மன்னார் பிரதேச செயலகம்  வழங்கிய அனுமதியை பயண்படுத்தியே மண் அகழ்வில் ஈடுபட்டு வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

-அண்மையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில்(டி.சி.சி) மாவட்டத்தினுள் மண் அகழ்விற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தி நிலையில் தொடர்ச்சியாக மண் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அக்கிராம மக்கள் மன்னார் பிரஜைகள் குழுவில் முறைப்பாடு செய்தனர்.

இந்த நிலையில் நேற்று(5) திங்கட்கிழமை மாலை 5 மணியலவில் ஓலைத்தொடுவாய் பகுதியில் உள்ள குறித்த தனியார் ஒருவரின் காணியில் மண் அகழ்வு செய்து ஏற்றிக்கொண்டு வீதியால் சென்ற டிப்பர் வாகனத்தை மக்கள் இடை மறித்தனர்.

இதன் போது மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை,உப தலைவர் அந்தோனி சகாயம் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

இதன் போது இரண்டு டிப்பர் வாகனங்களின் சாரதிகளும் மக்களுடனும் அங்கு சென்ற பிரஜைகள் குழுவின் முக்கியஸ்தர்களுடனும் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் பொலிஸார் குறித்த டிப்பர் வாகனத்தின் சாரதியை மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

-இதற்கிடையே குறித்த டிப்பர் வண்டியின் உரிமையாளரான மன்னார் மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றும் ஒருவர் சம்பவ இடத்திற்கு வந்து மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை,உப தலைவர் அந்தோனி சகாயம் மற்றும் மக்களை அச்சுறுத்தும் வகையில் கடும் தொனியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றும் நபர் அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் மன்னார் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை குறித்த பகுதியில் போலி ஆவணங்களை பயண்படுத்தி சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றமைக்கு எதிராக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு,அக்கிராம மக்களும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மன்னார் பிரதேசசெயலகத்தின் தன்னிச்சையாக வழங்கிய அனுமதியின் மூலமே குறித்த பகுதியில் சட்ட விரோத மண் அகழ்வு இடம் பெற்று வருவதாக மன்னார் பிரஜைகள் குழுவினர் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நிருபர்
(6-12-2016)










மன்னார் ஓலைத்தொடுவாய் கிராமத்தில் சட்ட விரோத மண் அகழ்வுக்கு எதிர்ப்பு-(Video&Photos) Reviewed by NEWMANNAR on December 06, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.