ஜெயலலிதாவிற்கு வடமாகாணசபை, கூட்டமைப்பு இரங்கல்
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு வட மாகாண சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்ட தோடு, 2 நிமிடங்கள் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமான வட மாகாண சபையின் 67ஆவது அமர்வில், வட மாகாண முதல மைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அஞ்சலி உரையை நிகழ்த்தினார்.
வட மாகாண சபை சார்பில், முதலமைச்சரின் இரங்கல் உரை தமிழகத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.
இதேவேளை அப்பலோ வைத்தியசாலையில் நேற்றைய தினம் காலமான தமிழக முதலமைச்சர் ஜெயல லிதா ஜெயராமிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இரங்கல் வெளிட்டுள்ளது.
நாடாளுமன்றம் இன்று காலை 9.30 அளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.
வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் 2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் கடற்தொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாதம் ஆரம்பமாகியது.
கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இன்றை ய விவாதத்தை ஆரம்பித்து வைத்தார்.
இதன்போதே தனது ஆரம்ப உரையில் காலஞ்சென்ற முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெய ராமிற்கு கூட்டமைப்பின் இரங்கலை வெளியிட்டார்.

Reviewed by NEWMANNAR
on
December 06, 2016
Rating:

No comments:
Post a Comment