அண்மைய செய்திகள்

recent
-

மனிதனின் மூளைக்குள் ஊடுருவி அதை கட்டுப்படுத்தும் பரிசோதனைகள் வெற்றி!


எதிர்காலத்தில் மனிதர்கள் மூளை மற்றும் மனதுக்குள் ஊடுருவி அவற்றை கட்டுப்படுத்தக் கூடிய முறை ஒன்றின் ஆரம்ப கட்ட பரிசோதனைகள் வெற்றியளித்துள்ளதாக கலிபோர்னியாவில் உள்ள ஸ்டென்பேர்ட் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கணினி மொழியில் இதனை மனிதனின் மனதை ஹெக் செய்வது என அவர்கள் கூறியுள்ளனர்.

இதன் மூலம் உடலில் இணைப்புகள் எதுவும் பொருத்தப்படாத நிலையில், எவருடைய மூளையாக இருந்தாலும் அதனை கட்டுப்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


எலிகளை பயன்படுத்தி இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மின் விளக்கின் ஒளியை அடிப்படையாக கொண்டும் பைபர் ஒப்டிக்கை பயன்படுத்தியும் விஞ்ஞானிகள் எலியின் மூளையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

எலிகளை உடனடியாக தூங்க செய்யவும் எலிகள் விரும்பாத உணவுகளை கூட உண்ண செய்துள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த பரிசோதனைக்கு பயன்படுத்தப்பட்ட எலிகளின் மூளை பல்வேறு சேதங்களுக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது.


இதனால், இந்த பாதிப்பான நிலைமையை சரி செய்து, எதிர்காலத்தில் மனிதனின் மூளை மற்றும் மனதுக்குள் ஊடுருவி அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த பரிசோதனை வெற்றிகரமாக அமைந்தால், எதிர்காலத்தில் பயங்கரமான குற்றவாளிகளின் திட்டங்களை கண்டறிய முடியும் என்பதுடன் உலகில் மனிதனின் தனித்துவத்திற்கு வரையறை ஏற்படும்.

மேலும் குற்றவாளிகளின் கைகளில் இந்த தொழில்நுட்பம் சிக்கினால், பாரதூரமான நிலைமைகள் ஏற்படும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

மனிதனின் மூளைக்குள் ஊடுருவி அதை கட்டுப்படுத்தும் பரிசோதனைகள் வெற்றி! Reviewed by Author on December 04, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.