மன்னாரில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையின் காரணமாக மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்லவில்லை.Photos
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் அதிகலவான மீனவர்கள் இன்று வியாழக்கிழமை (01) கடற்தொழிலுக்குச் செல்லவில்லை.
மன்னாரில் இருந்து காங்கேசன் துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புக்களில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதே வேளை கடற்பரப்பிலும் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் அதிகலவான மீனவர்கள் இன்று வியாழக்கிழமை காலை மீன்பிடிக்கச் செல்லவில்லை.
மேலும் மன்னார் பெரிய பாலத்தடியில் இருந்து ஆத்துவாய் பகுதியூடாக கடலுக்குச்செல்லும் மீனவர்களை சீரற்ற காலநிலையின் காரணமாக மீனவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அப்பகுதியில் கடற்பாதுகாப்பில் ஈடுபடும் கடற்படையினர் தொழிலுக்குச் செல்ல அனுமதி மறுத்துள்ளனர்.
மேலும் மன்னார் கடற்கரை பகுதியில் வழமைக்கு மாறாக சற்று காற்று வீசி வருவதோடு மழையும் பெய்து வருகின்றது.
இதனால் மீனவர்களின் இயழ்பு நிலை பாதீக்கப்பட்டுள்ளதோடு மன்னாரில் திடீர் திடீர் என மழை பெய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
(01-12-2016)

Reviewed by NEWMANNAR
on
December 01, 2016
Rating:
No comments:
Post a Comment